மணிரத்னம் படத்துக்காக சாதுவானார் நித்யா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பணத்தின் பின்னால் ஓடாமல் கேரக்டர் பிடித்தால்தான் நடிப்பேன் என்று தனக்கு தானே வட்டம்போட்டுக்கொண்டு சில நடிகைகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த வகையை சேர்ந்தவர்தான் நித்யா மேனன். கதை சரியில்லை, கேரக்டர் பிடிக்கவில்லை என்றால் அதே இடத்தில் மல்லுகட்டி அந்த படத்தை தூக்கியடிக்கும் ரகம். இந்த குணத்தை தெரிந்துகொண்டிருப்பதால் சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவர் பக்கம் செல்வதை தவிர்த்துவிடுகின்றனர். அதையும் மீறி வருபவர்கள்தான் நித்யாவிடம் கதை சொல்லி கால்ஷீட் பெறுகின்றனர். ‘நம்பர் ஒன் நடிகையாக எப்போது ஆகப்போகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டால்,‘நல்ல படங்களில் நடிக்கத்தான் விரும்புகிறேன் அதற்காக காத்திருந்து பிடித்தமான கதை வந்தால்தான் நடிப்பேன். நம்பர் ஒன் ஆசையெல்லாம் எனக்கு கிடையாது’ என ரத்தன சுருக்கமாக பதில் சொல்கிறார்.

அதே சமயம் வழக்கமாக கால்ஷீட் பிரச்னை செய்வது, ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவது என அவப்பெயர் எடுத்த நித்யா, மணிரத்னம் இயக்கும் ‘ஓகே கண்மணி’ படத்துக்கு மட்டுமே சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கிற்கு வருகிறாராம். சம்பளம் பற்றி இதுவரை அவரிடம் பேசவில்லையாம். கதையும் கேட்காமல் நடித்துக் கொண்டிருக்கிறாராம். மற்ற டைரக்டர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களுக்கு மட்டும் நித்யா தொந்தரவு தருவது ஏன் என கோடம்பாக்கத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*