கனடாவில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கனடா நாட்டில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் வெளியிட்ட இரண்டு தோழிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வின்னிபெக் நகருக்கு அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Serena McKay( 19) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

செரீனாவும் இவரது நெருங்கிய இரண்டு தோழிகளும் அருகில் உள்ள Sagkeeng Anicinabe என்ற பள்ளியில் ஒன்றாக பயின்று வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மூவரும் வெளியே சென்ற பிறகு செரீனா வீடு திரும்பவில்லை.

இச்சம்பவத்தை தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு புதரில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், பெற்றோர் மூலம் அது காணாமல் போன செரீனாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பேஸ்புக்கில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாக பரவியுள்ளது. வீடியோவை பொலிசார் சோதனை செய்தபோது அதில் செரீனா இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை ஆதாரமாக சேகரித்துக்கொண்ட பொலிசார் தோழிகள் இருவரையும் உடனடியாக கைது செய்தனர். மேலும், செரீனாவை கொலை செய்ததாக கூறி இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செரீனாவின் கொலைக்கு பின்னணி காரணம் என்ன? இதில் வேறு சில நபர்களும் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*