கனடா சாலையில் இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்: பகீர் வீடியோ!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கனடாவில் பல அடி உயர ராட்சஷ கிரேனில் விளையாட்டாக ஏறிய இளம் பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கனடாவின் டொராண்டோ நகரில் நேற்று இரவு நேரத்தில் சாலையில் கட்டிட வேலைகளுக்கு பயன்படும் ராட்சஷ கிரேன் நிறுத்தப்பட்டிடுந்தது.

அப்போது அந்த இடத்துக்கு வந்த 25 வயது மதிக்கதக்க இளம் பெண் திடீரென அந்த கிரேனில் ஏறினார்.

மெது மெதுவாக ஏறிய அவர் கிரேனின் உச்சியை அடைந்தார். ஆர்வத்தில் கிரேனில் இறங்கிய அவரால் கீழே இறங்க முடியவில்லை.

இதை கண்ட அருகிலிருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அங்கு Matthew Pegg என்னும் தீயணைப்பு வீரரின் தலைமையில் ஒரு குழு வந்தது.

Matthew மட்டும் அந்த கிரேனின் பக்கவாட்டை பிடித்து கொண்டு தன் உடலில் கயிறை கட்டி கொண்டு மேலே மெதுவாக ஏறினார்.

பின்னர், கிரேனில் இருந்த பெண்ணை கெட்டியாக பிடித்து கொண்டு அவர் கீழே பத்திரமாக இறங்கினார்.

கிழே இறக்கப்பட்ட பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் எதற்காக மேலே ஏறினார் என்ற விவரம் தெரியவில்லை.

தைரியமாக கிரேனில் ஏறி பெண்ணை மீட்ட Matthew Pegg கூறுகையில், இது போன்ற சம்பவத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.

அந்த பெண் பயமே இல்லாம மேலே உட்கார்ந்திருந்தார். அவரின் தைரியம் என்னை வியக்க வைத்தது.

எங்கள் தீயணைப்பு துறைக்கு அவர் பயிற்சி அதிகாரியாக வர வேண்டும் என சிரித்து கொண்டே அவர் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*