பேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பேஸ்புக் பயன்படுத்துறவங்களை இரண்டு விதமாக பிரிக்கலாம், ஒரு வகையை சேர்ந்தவங்க எங்க போனாலும் போட்டோ பிடிச்சு அதை பேஸ்புக்கில் அப்டேட் செய்யுறவங்க, இன்னும் சிலர் எப்போவாவது பேஸ்புக் வருவது வந்தாலும் கேம்ஸ் மட்டும் விளையாடி மற்றவர்களுக்கு கேம் ரிக்வஸ்ட்களை அனுப்புவது.

ஒரு சிலருக்கு கேம் விளையாட பிடிக்கும், ஒரு சிலருக்கு கேம் விளையாடுவது பிடிக்காது, இருந்தும் உங்க நணப்ரகள் தொடர்ந்து கேம் ரிக்வஸ்ட் கொடுக்கின்றார்களா அப்ப அதை எப்படி ப்ளாக் செய்வது என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க.

பேஸ்புக்
முதலில் பேஸ்புக் சைன் இன் செய்யுங்கள்

டவுன் பட்டன்
இப்போ வலது பக்கம் இருக்கும் டவுன் பட்டனை க்ளிக் செய்யுங்கள்

செட்டிங்ஸ்
டவுன் பட்டனில் இருக்கும் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

ப்ளாக்கிங்
செட்டிங்ஸ் ஆப்ஷனின் இடது புறத்தில் ப்ளாக்கிங் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

மேனேஜ் ப்ளாக்கிங்
ப்ளாக்கிங் க்ளிக் செய்தவுடன் மேனேஜ் ப்ளாக்கிங் என்ற ஸ்கிரீன் ஓபன் ஆகும்

தேர்வு
மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனில் உங்களை கடுப்பாக்கும் அப்ளிகேஷன்கள், தேர்வு செய்யலாம். இந்த ஸ்கிரீனில் ப்ளாக் யூசர்ஸ், ப்ளாக் ஆப் இன்வைட் என உங்களுக்கு இடையூறாக இருக்கும் அப்ளிகேஷன்களை ப்ளாக் செய்ய முடியும்

ப்ளாக் ஆப்ஸ்
மேனேஜ் ப்ளாக்கிங் ஸ்கிரீனின் கீழ் பகுதியில் ப்ளாக் ஆப்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும், இங்கு நீங்க ப்ளாக் செய்ய விரும்பும் அப்ளிகேஷனை என்டர் செய்து ப்ளாக் செய்யலாம்

அப்ளிகேஷன்
இப்போ நீங்க ப்ளாக் செய்த அப்ளிகேஷன் ப்ளாக் ஆப்ஸ் ஸ்கிரீனில் இருக்கும், ப்ளாக் செய்த அப்ளிகேஷனை அன்ப்ளாக் செய்யவும் முடியும்

ப்ளாக் இன்வைட்ஸ்
மேனேஜ் அப்ளிகேஷன்ஸில் ப்ளாக் இன்வைட்ஸ் ஆப்ஷன் சென்று உங்களுக்கு கேம் ரிக்வஸ்ட் கொடுப்பவர்களின் பெயரை டைப் செய்யதால் அவர்களிடம் இருந்து உங்களுக்கு எந்த ரிக்வஸ்ட்களும் வராது.

ப்ளாக் பேஜஸ்
கேம் மற்றும் அப்ளிகேஷன்கள் இல்லாமல் பேஸ்புக் பக்கங்களுக்கு லைக் செய்ய வேண்டும் ரிக்வஸ்ட்களும் அதிகம் வருகின்றது, இதை ப்ளாக் செய்ய மேனேஜ் அப்ளிகேஷன் ஸ்கிரீனின் கடைசி ஆப்ஷனான ப்ளாக் பேஜஸ் சென்று உங்களுக்கு தேவையான பக்கங்களின் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்ய முடியும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*