கம்ப்யூட்டரில் Pen Drive Detect ஆகவில்லையா?

பிறப்பு : - இறப்பு :

ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு பைல்களை(File) பரிமாறி கொள்வதற்கு மிகவும் உதவுவது பென்டிரைவ்.

நமது தனிப்பட்ட தகவல்களை பதிந்து வைத்து கொள்ளவும் இது உதவுகிறது.

சில சமயங்களில் நாம் பென் டிரைவினை கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்போது டிடெக்ட்(Detect) ஆகாது.

இது கம்ப்யூட்டரில் யூ.எஸ்.பி. போர்ட்டில் ஏற்பட்ட பழுது அல்லது பென் டிரைவ்- ல் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கூட காரணமாக இருக்கலாம்.

இந்த பிரச்சனையினை தீர்க்க சில வழிகளை பயன்படுத்தி பென் டிரைவினை கம்ப்யூட்டரில் இணைக்க இயலும்.

செய்யவேண்டியவை

முதலில் யுஎஸ்பி(USB) அல்லது பிளாஷ் டிரைவினை(Flash Drive) கம்ப்யூட்டரில் உள்ள மற்ற போர்ட்டுகளில்(USB port) இணைத்து வேலை செய்கிறதா என பார்க்க வேண்டும்.

வேலை செய்யவில்லை எனில் மற்ற கணினிகளில் பொருத்தி பார்க்கவேண்டும்.

சில சமயங்களில் யுஎஸ்பி போர்ட்டுகளில் உள்ள கோளாறுகள் காரணமாக கூட பென் டிரைவ் வேலை செய்யாமல் போகலாம்.

எந்த கம்ப்யூட்டரிலும் வேலை செய்யவில்லை எனில் கம்ப்யூட்டரின் டிவைஸ் மேனேஜர்(Device Manager) மூலமாக சரி செய்யலாம்.

கம்ப்யூட்டரின் கண்ட்ரோல் பேனலுக்கு சென்று அங்கு HardWare and Sound என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து டிவைஸ் மேனேஜரை(Device Manager) Click செய்ய வேண்டும்.

அதில் யுனிவர்சல் சீரியல் பஸ் கண்ட்ரோலர்(Universal Serial Bus Controller) என்ற ஆப்ஷனை(Option) தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில் டிடெக்ட்(Detect) ஆகாத டிரைவினை தேர்ந்தெடுத்து அன் இன்ஸ்டால்(Uninstall) செய்யவேண்டும்.

இப்போது டிரைவினை கழற்றி கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட்(Re start) செய்யவேண்டும். இப்போது பென் டிரைவினை கம்ப்யூட்டரில் இணைத்தால் நிச்சயம் டிடெக்ட்(Detect) ஆகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit