வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட விளையாடிய மெஸ்ஸி.. அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்!

பிறப்பு : - இறப்பு :

லாலிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ‘எல்கிளாசிகோவில் பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்ஸி ரத்தம் கொட்டக் கொட்ட வாயில் துணியுடன் விளையாடிய சம்பவம் வைரலாகியுள்ளது. ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. போட்டியின் 20-வது நிமிடத்தில் பந்தை எடுக்க மெஸ்சியும்,

ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோவும் போட்டி போடுகையில் மார்சிலோனாவின் முழங்கை மெஸ்சியின் வாயில் பலமாக தாக்கியது. இதனால் மெஸ்சியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

மருத்தவர்களின் சிகிச்சைக்கு பின்னர் வாயில் துணையை வைத்துக் கொண்டு களமிறங்கிய மெஸ்ஸி தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 33வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார்.

பின்னர் 92வது நிமிடத்தில் தனது வரலாற்று சாதனைமிக்க கோலை அடித்து பார்சிலோனா அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக தனது 500-வது கோலை பதிவு செய்தார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit