ஜிமெயில் அக்கௌண்ட்யும் Encrypt செய்யலாமே!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

en

நமது தனிபட்ட விவரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றினை ஹேக்கர்கள் எளிதாக திருடிவிடுகின்றனர்.

இதனை தடுப்பதற்காக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தகவல்கள் திருடு போகாத வண்ணம் என்க்ரிப்ட் (Encrypt) வசதியானது செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் வாட்ஸ் அப்-ல் என்க்ரிப்ட் வசதியானது அறிமுக செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கூகுளின் நிறுவனமானது ஜிமெயிலில்(Gmail) புதிதாக என்கிரிப்ட் செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மற்றவர்கள் உங்களின் தகவல்களை அனுமதியின்றி இயக்க நினைத்தால் அவை அழிந்துவிடும்.

ஃபயர் பாக்ஸ்(FireFox Browser) பிரவுசரில் ஜிமெயிலை என்கிர்ப்ட் செய்யும் முறை

ஃபயர் பாக்ஸ்(FireFox) பிரவுசரை பயன்படுத்துபவர்கள் ஆட்-ஆன்ஸ் ஆன் ஃபயர்பாக்ஸ் (add-ons on Firefox) என்னும் சேவையினை பயன்படுத்தி என்க்ரிப்ட்டெட் கம்யூனிகேஷன்ஸ் எக்ஸ்டென்ஷன்-ஐ(Encrypt communication extensions) ஃபயர் பாக்ஸில் இன்ஸ்டால்(Install) செய்யவேண்டும்.

பின் பிரவுசரை க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் ஓப்பன் செய்யவெண்டும்.

இப்போது ஜிமெயிலில் மெயில் கம்போஸ்(Compose) செய்து ரைட் க்ளிக்(Right Click) செய்யும் போது என்க்ரிப்ட் வசதி இருப்பதை காணலாம்.

அடுத்து பாஸ்வேர்ட்(Password) ஒன்றினை கொடுக்க வேண்டும். இப்போது நீங்கள் அனுப்பும் மெயிலானது என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கும்.

ஆனால் நீங்கள் மெயில் அனுப்பும் நபரும் இந்த வசதியினை பெற்றிருக்க வேண்டும்.

சேஃப் ஜிமெயில்(SafeGmail)

கூகுள் க்ரோமினை பயன்படுத்துபவர்கள் சேஃப் ஜிமெயில் வசதியினை பயன்படுத்தலாம்.

க்ரோம் பிரவுசரில்(Chrome Browser) சேஃப் ஜிமெயில் இன்ஸ்டால் செய்து மீண்டும் க்ரோமை ரீஸ்டார்ட் செய்யவேண்டும்.

இனி அனுப்பப்படும் மெயில் என்க்ரிப்ட் செய்யப்பட்டே இருக்கும். டீ என்க்ரிப்ட்(De-encryption) செய்யவதற்கு எக்ஸ்டென்சன் வசதி இருக்கும்.

என்க்ரிப்ட் பட்டனை கிளிக் செய்து கேட்கப்படும் கேள்வி அல்லது பதில்களை பதிவு செய்து என்க்ரிப்ட் சென்ட் (Encrypt Send) பட்டனை கிளிக் செய்து மெயிலை அனுப்பலாம்.

மெயிலை பெறுபவருக்கும் கேள்வி எழுப்பும் திரை தெரியும், அதற்கு பதில் அளிக்கும் பட்சத்தில் மெயிலினை படிக்க முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit