பூமியை அழிவில் இருந்து காப்பவர் யார்? 2017 இல் ஏற்படும் உலக அழிவு தடுக்கப்படுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகம் பாரிய ஆபத்தில் இருக்கின்றது, அடுத்து ஓர் உலகப் போர் நெருங்கி வருகின்றது என்பது இப்போது அதிகமாக வெளிவரும் செய்தி.

எப்போதோ கூறிய தீர்க்க தரிசனங்களும், இப்போதைய உலக நடப்பும் இந்த உலக யுத்தத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் அப்படி ஓர் நிலை உலகிற்கு ஏற்பட்டால் பூமியை காப்பாற்றப் போவது யார்?

நிகழ் கால நகர்வுகள் உலகை அழிவுப்பாதைக்கு தள்ளிக் கொண்டு செல்லப்படுவதை அவதானிக்க கூடியதாகவே இருக்கின்றது.

எவ்வாறாயினும் நவீன உலகப் பாதையில் ஓர் யுத்தம் ஏற்படுமானால் அதற்கு தாக்குப்பிடிப்பது கடினமே. புல் பூண்டு கூட மிஞ்சாத அளவு அழிவை ஏற்படுத்தும் வகையான ஆயுத அணு மழை பொழிந்து உலகை சிதைத்து விடும்.

இந்த நிலையில் உலகை காப்பாற்றப் போவது யார்? என்ற முக்கிய கேள்வி சர்வதேச ஊடகங்களிடம் பிரபல்யமடைந்து விட்டது. அதற்காக பதில்களும் கூறப்பட்டுள்ளன.

ஆரம்ப காலம் முதல் உலகம் பாரிய அபாயங்களை சந்திக்க எத்தனித்த போது அவை தடுக்கப்பட்டுள்ளது.

காரணம் பூமியை காப்பாற்றும் நோக்குடன் மர்ம நபர்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது இது தொடர்பில் ஆய்வு செய்பவர்களின் கருத்து.

இதில் இரு பிரிவுகள் உள்ளன அதாவது ஒரு தரப்பினர் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகளைக் தடுத்து வருவதாகவும், மறு தரப்பினர் காலப்பயணம் செய்து எதிர் காலத்தில் இருந்து வரும் மனிதர்கள் பூமியை காப்பாற்றுவதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்பவர்கள், வேற்றுக் கிரகவாசிகளில் அழிக்கும் நோக்குடன் ஒரு பிரிவும், பூமியை காக்கும் நோக்குடன் ஒரு தரப்பும் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அடிப்படையில் இதனையே புராணங்கள் தேவர்கள், அசுரர்கள் எனவும் அரக்கர்கள், தூதர்கள் எனவும் பிரித்து எழுதப்பட்டன என்பது ஆய்வாளர்களது வாதம்.

புராணக்கதைகள் இவ்வாறான வேற்றுக்கிரக வாசிகளை அடிப்படையாக கொண்டே இயற்றப்பட்டன என்பதும், ஆரம்ப காலம் முதல் பூமி அழிவுகளில் இருந்து தப்பி வருவது இவ்வாறு யாரோ காப்பாற்றுவதால் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவற்றினை பண்டைய கால சித்திரங்களும், புராணக் கதைகளும் கூறுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதனால் பூமி அவர்கள் மூலமாகவே தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது என்று ஆய்வாளர்கள் தர்க்க ரீதியில் வாதிடுகின்றனர்.

இதில் வேற்றுக் கிரக வாசிகளா? காலப்பயண மனிதர்களா? யார் உண்மை என்பது கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் இதில் இரண்டில் ஒன்று கட்டாயம் நடைபெற்று கொண்டு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கேள்வி, சந்தேகம் ஏற்பட்டது முதலாம், இரண்டாம் உலக யுத்த காலப்பகுதிகளில் அக்காலத்திற்கு தொடர்பு இல்லாத விமானங்கள் (பறக்கும் தட்டுகள்) அவதானிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் அமெரிக்கா இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட, 2004 சுனாமி முதல் உலகம் பாரிய ஆபத்துகளை சந்திக்க எத்தனித்த போது அதன் தாக்கத்தினை குறைக்கும் நோக்கத்தோடு மர்ம நபர்கள் செயற்பட்டு கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எமது சூரிய குடும்பத்தில் உள்ள ஏனைய கிரகங்கள் அனைத்தும் விண்கற்கள் மோதல்கள் மூலம் பல சிதைவுகள் ஏற்பட்டுள்ளது அவதானிக்கக் கூடிய ஒன்றே.

ஆயினும் பூமி மீது விண்கற்கள் மோதல் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. கணித நிகழ்தகழ்வின் அடிப்படையில் பிரபஞ்சத்தில் சுற்றித் திரியும் கோடானு கோடி விண்கற்கள் பூமியில் மோதும் சாத்தியக் கூறுகளே அதிகம்.

ஆனாலும் அவ்வாறு மோதல் ஏற்படாமல் தடுக்கும் நோக்குடன் பறக்கும் தட்டு நபர்கள் செயற்படுவதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

பூமியில் மோத வந்த விண்கல் ஒன்றினை இடை வழியில் ஏதோ ஒரு பொருள் தாக்கி அழிக்கும் புகைப்படங்களையும் இதற்கு ஆதாரமாக விண்வெளி ஆய்வாளர்கள் அண்மையில் வெளியிட்டனர்.

இவ்வாறான பல சந்தர்ப்பங்களின் போது விண்கற்களிடம் இருந்து பூமி காப்பாற்றப்படுவது பதியப்பட்டுள்ளது. இதில் அவர்கள் யார் என்ற கேள்வி பிரதானமானது.

எனினும் காலப்பயணத்தில் முப்பாட்டன் கொள்கை இன்றும் சற்று இடிப்பதனால் இவை வேற்றுக்கிரகவாசிகள் மூலமாக நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஆதாரமாக பூமியின் உருவாக்கப்படும் பயிர்வட்டங்களை கூறுகின்றனர். வேற்றுக்கிரகவாசிகளால் பூமிக்கு கூறும் செய்திகளாகவே இவை இன்றும் நம்பப்படுகின்றது.

குறிப்பாக இப்போது பூமிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினை எடுத்துக்காட்டுவதாகவும் எச்சரிப்பதாகவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

2017ஆம் ஆண்டுகளில் ஏற்படப்போகும் ஆபத்தினை முன் கூட்டியே உணர்த்தும் வகையில் பிரித்தானியாவில் பல பகுதிகளில் பயிர் வட்டங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த புதிய பயிர் வட்டங்கள் கூறும் செய்திகள் என்ன என்பது தொடர்பில் தீவிர ஆய்வுகள் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

அவ்வகையில் இப்போது 2017ஆம் ஆண்டு ஏற்படப்போவதாக கூறப்படும் உலக அழிவில் இருந்தும் பூமி காப்பாற்றப்படுமா?

எவ்வாறாயினும் அடுத்து உலகம் சந்திக்கப் போகும் பாரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றப் போவது வேற்றுக் கிரக வாசிகளா? காலப்பயணத்தின் ஊடாக வரும் எதிர்கால மனிதர்களா?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*