தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வாழ்ந்த இடங்களில் இன்று வாழ முடியவில்லை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mullai

முல்லைத்தீவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் நாங்கள் எமது சொந்த நிலங்களில் மீள்குடியேறினோம். ஆனால் தற்போது மீள்குடியேற முடியாமல் தவிக்கின்றோம் என முல்லைத்தீவு முஸ்லிம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது பூர்வீக காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை மற்றும் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினரும் இடையில் சமாதான சூழல் ஏற்பட்டிருந்தது.

அப்பொழுது நாங்கள் முல்லைத்தீவில் மீள்குடியேறினோம். அக்காலத்தில் இங்கே வாழ்ந்து கொண்டிருந்த தமிழ்மக்கள் எங்களை அன்புடன் வரவேற்றனர்.

எமது இருப்பிடங்களை அடையாளம் காட்டியதுடன் அவர்கள் சகல உதவிகளையும் செய்தார்கள்.

பின்னர் 2006ஆம் ஆண்டு இருதரப்பினருக்கும் இடையில் யுத்தம் ஏற்பட்டது. அதனால் நாங்கள் இடம்பெயர்ந்தோம்.

அதன்பிறகு எமது சொந்த நிலங்களில் இன்றுவரை மீள்குடியேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும் இது வரையில் எமது காணிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம் கிடைக்காமையே இதற்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit