கடைசி ஓவரில் நடந்த த்ரில்..பேசிய வாய்களுக்கு பூட்டு போட்ட டோனி: ரசிகர்கள் ஆரவாரம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. புனேவில் 4 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஹைதராபாத் அணி 8.1 ஓவரில் 55 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது தவான் 29 பந்தில் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 14 பந்தில் 21 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

டேவிட் வார்னர் 40 பந்தில் 43 ஓட்டங்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். 4-வது வீரராக களம் இறங்கிய ஹென்றிக்ஸ் அதிரடியாக விளையாடி 28 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 55 ஓட்டங்கள் குவிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.

புனே அணிக்கு, துவக்க வீரர் ரகானே (2), ஸ்மித் (27), ஸ்டோக்ஸ் (10) என அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெளவிலியன் திரும்பினர் . திருப்பதி (59) அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.

இதையடுத்து களமிறங்கிய டோனி அவ்வப்போது பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார்.

இவருடன் ஜோடி சேர்ந்த மனோஜ் திவாரி, தன்பங்கை சரியாக செய்தார். கடைசி நேரத்தில்தோனி விஸ்வரூபம் எடுக்க, புனே அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இறுதியில் டோனி 61 ஓட்டங்களும், திவாரி 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் புனே அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய டோனி ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட டோனியை தொகுப்பாளர் அழைத்த போது ரசிகர்கள் டோனி..டோனி என்று கத்தி ஆரவாரம் செய்தனர்.

மேலும் இந்த பத்தாவத் ஐபிஎல் தொடரில் டோனியின் செயல்பாடு குறித்து பேசப்பட்டது, அவ்வாறு பேசப்பட்டவர்கள் அனைவருக்கும் டோனி தனது மட்டையால் பதிலடி கொடுத்து அவர்களது வாயை அடைத்துள்ளார் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*