இந்த ஒரு செயல் உங்களுக்கு பணக் கஷ்டத்தை அளிக்கலாம்!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வாஸ்து சாஸ்திரங்கள் மற்றும் பல புராண, இலக்கியங்களில் நமது முன்னோர்கள் எந்தெந்த காரியங்கள், செயல்கள் கஷ்டத்தை தரும், லாபத்தை தரும், மகிழ்ச்சியை தரும், இகழ்ச்சியை தரும் என நிறைய கூறி சென்றுள்ளனர். அதில் பறவைகளை கூண்டில் அடைப்பது பணக் கஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டவசத்தை அளிக்குமா? எதனால் இப்படி கூறப்படுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்…

சரியான தகவல் அறிவதில்லை!

எதிர்பாராதவிதமாக, நாம் நமக்கு பிடித்த பிராணிகளை வாங்கி வீட்டில் வளர்க்கிறோம். இது அவரவர் சுய விருப்பமாக இருக்கிறது. இதில் நாம் பிராணிகளை எப்படி வளர்க்க வேண்டும் என சரியாக அறிவதில்லை.

ஆம், இது போன்று கூண்டில் பறவைகளை அடைத்து வளர்ப்பது தீய சக்தியையும், துரதிர்ஷ்டத்தையும் தரும் என தெரியாமலேயே பலர், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் எழ காரணமாகிவிடுகின்றனர்.

ஒன்றாக வாழ்பவை! பறவைகள் ஒன்றாக சேர்ந்து வாழும் குணாதிசயம் கொண்டவை. இதை நாம் தினமும் வானத்திலேயே கண்கூட பார்க்கலாம். இப்படிப்பட்ட உயிரை நாம் தன்னந்தனியாக கூட்டில் அடைத்து வைப்பது, அதன் இயற்கை பண்பை, குணத்தை அளிக்க செய்கிறது.

கோபம்!

தனிமைப்படுத்தப்பட்ட நிலை, அலுப்பு போன்றவை அதன் இயற்கை குணத்தை இழந்து ஆக்ரோஷ குணத்திற்கு மாற வைக்குமாம்.

கர்மா!

வானத்தில் உயர பறந்து மகிழ்ந்திருந்த பறவையை கூண்டில் அடைத்து சோகத்தில் ஆழ்த்துவது, கர்மா போல உங்களை திருப்பி தாக்குமாம். இதனால், தான் வீட்டில் பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்க கூடாது என கூறுகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*