அண்ணல். அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கம்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வரும் தினத்தன்று நாம் முரண்பாடுகளால் ஆன வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் சமத்துவத்தைப் பெற இருக்கும் நாம், சமூக, பொருளாதார வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வோடு வாழ்வோம். ஒரு மனிதன், ஒரு ஓட்டு மற்றும் ஒரு மனிதன், ஒரு மதிப்பு என்கிற கொள்கையை நாம் அரசியலில் அங்கீகரிப்போம். அதே நேரத்தில் சமூக, பொருளாதார அமைப்பில் ஒரு மனிதன், ஒரு மதிப்பு என்கிற அடிப்படையை நாம்(இந்த சமூகம்) தொடர்ந்து மறுக்கிறோம்.

எத்தனை காலம் இந்த முரண்பாடுகளோடு வாழப்போகிறோம்? சமூக, பொருளாதார அமைப்பில் ஒரு மனிதன், ஒரு மதிப்பு என்ற சமத்துவத்தை நாம் தொடர்ந்து நிராகரிக்கிறோம் என்றால் நம் அரசியல் ச‌னநாயகம் அழிவை சந்திக்கும். இந்த முரண்பாடுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் இந்த ஏற்றத்தாழ்வுகள் நாம் இத்தனை சிரம‌ப்பட்டு உருவாக்கிய அரசியல் ச‌னநாயகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பை சிதறடித்து விடும் !”-அண்ணல். அம்பேத்கர்

வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா என சிறு வயதில் பள்ளியில் நாம் படித்த பாடம் இன்று கானல் நீராக மாறி வருகின்றது. மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பொது பட்டியலில் இருந்து மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றி மையத்தில் அதிகாரத்தை குவிப்பதை தான் அன்றைய காங்கிரசு செய்தது, இன்று மோடியும் செய்கின்றார்.

அதே போல பண்பாட்டு தளத்தில் இந்தியா ஒற்றை மைய நாடாக மாறி வருகின்றது. இந்தியாவின் மொழியாக இந்தியும், இந்தியாவின் மதமாக இந்து மதமும் தொடர்ந்து திணிக்கப்பட்டு வந்தது, மோடியின் ஆட்சி அந்த பணிகளின் வேகத்தை அதிகரிக்கின்றது. சனநாயகத்திலிருந்து இந்திய அரசு சர்வாதிகாரத்தை நோக்கி பீறு நடைபோட்டு வருகின்றது.

“சாதி தான் சமூகமென்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்”- கவிஞர்.பழனி பாரதி.

மோடி அரசு கல்வியை பார்ப்பனியம‌யமாக்கி வருகின்றது. மோடி அரசின் சாதிய அணுகுமுறையால் படுகொலை செய்யப்பட்டார்கள் ரோகித் வெமுலாவும், முத்து கிருஷ்ணனும். 105 செயற்கைகோள்களை ஒரே ஏவுகணையில் செலுத்தும் இந்தியா மறுபுறம் மலக்குழிகளில் சக மனிதனை இறக்கி கொல்கின்றது.

உலகமயமாக்கமும், தனியார்மயமாக்கமும் ஏழைகளை பரம ஏழைகளகாவும், பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாகவும் மாற்றி வருகின்றது. உலகமயமாக்கலுக்கு எதிராக மக்கள் ஒன்று சேர்ந்து போராடக்கூடாது என்பதற்காக சாதி, மத உணர்வுகளைத் தூண்டி மக்களை துண்டாடுகிறது மோடி அரசு.

இந்த நேரத்தில் அம்பேத்கரின் 125 பிறந்தநாளில் அவர் தொடர்ந்து பேசி வலியுறுத்திய‌ சனநாயகத்தையும்,சமத்துவத்தையும், எல்லா மக்களுக்கான பொருளாதாரத்தைப் பற்றியும் பேசுவதற்காக இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

வாருங்கள் அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்திய சனநாயகத்தை உயர்த்திப் பிடிப்போம்!

“சாதி என்பது இந்திய சமுதாயத்திலிருந்து களையப்பட வேண்டிய களை; எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவம் -அண்ணல்.அம்பேத்கர் ”

அண்ணல். அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு கருத்தரங்கம் – பாபாசாஹேப் டாக்டர்.அம்பேத்கர் முன்வைத்த‌ சனநாயகம்

நாள் – ஏப்ரல் 22, 2017 – சனிகிழமை மாலை 5 மணி
இடம் – இக்சா மையம், எழும்பூர், சென்னை.

தொடர்புக்கு – 9840880737

கருத்துரை:-

நீதிபதி. அரிபரந்தாமன் -சென்னை உயர் நீதிமன்றம் (ஓய்வு)

பேராசிரியர். நாகநாதன் – பொருளியல் துறை, சென்னை பல்கலைகழகம் (ஓய்வு)

சமூக செயற்பாட்டாளர் – ஆளூர் ஷாநவாஸ் – துணை பொது செயலாளர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி

தோழர் இளையராஜா – தலைவர். தமிழ்நாடு மாணவர் இயக்கம்

வழக்கறிஞர் சரவணன் -பெரியார் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம்.
தோழர் நற்றமிழன் – விசை ஆசிரியர் குழு – இளந்தமிழகம் இயக்கம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*