இணையத்தில் நம் அந்தரங்கப் படங்களை வெளியிட்டால் என்ன செய்ய வேண்டும்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இணையத்தின் ஆகப்பெரிய சாபக்கேடு. ஒருவரை பழிவாங்க அவரின் அந்தரங்கமான விஷயங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் அப்லோடு செய்வதுதான் ரிவெஞ்ச் பார்ன். உலகம் முழுவதுமே இந்த விஷயம் நிறையப் பேரின் நிம்மதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுப்பதற்கான வழிவகைகளை அனைத்து சமூக வலைதளங்களும் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றன.

இதைத் தடுப்பது என்பது இப்போதைக்கு இயலாத காரியம் என்றே சொல்லலாம். ஆனால், அப்படி நடந்தால் ஒருவர் என்ன செய்ய வேண்டுமென்பதை தெரிந்துகொள்வதும் அவசியம். ஏனெனில், தெரியாமல் நிகழும் தவறுக்கு ஒருபோதும் ஒருவர் வருத்தப்படத் தேவையில்லை. அதை எதிர்த்து நின்று போராடுவதுதான் சரியான வழியாக இருக்க முடியும். ஒருவேளை, உங்களுக்கு எதிராக ஒருவர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான விஷயங்களில் ஈடுபட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

1) படங்கள் யாருக்குச் சொந்தம் என்பதைப் பாருங்கள்:
நீங்கள் க்ளிக் செய்யும் எல்லாப் படங்களும் உங்களுக்குத்தான் சொந்தம். அதன் பகிர்வது, வெளியிடுவது எல்லாம் உங்கள் உரிமை. அதை யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நீங்கள் வழக்குத் தொடுக்கலாம். அந்தப் படங்களை அது வெளியான இணையதளத்தில் இருந்தோ, சமூக வலைதளத்தில் இருந்தோ நீக்க வைக்கலாம்.

உங்களை வேறு யாராவது படம் எடுத்திருந்தால் என்ன செய்வது? உங்கள் அனுமதி இல்லாமல் படம் எடுத்திருந்தால் அதுவும் தவறுதான். அதுவும் அந்தரங்கமான படங்களை எடுத்தால் அது க்ரைம். புகைப்படத்தின் தன்மை வைத்துதான் இதற்கு முடிவு எடுக்கப்படும். ஒருவரை இழுவுப்படுத்தும், ஆபாசமான புகைப்படங்களை எதையும் எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அதைப் பகிர்வது இன்னொரு குற்றம்.

2) அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்:
இணையத்தில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. எதையும், எப்போது வேண்டுமென்றாலும் நீக்கலாம். அல்லது எடிட் செய்யலாம். எனவே, உங்களுக்கு தவறு எனத் தோன்றும் அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள பெயரை கூகுள் செய்து பாருங்கள். உங்களுக்குத் தெரியாத பல இடங்களிலும் உங்கள் புகைப்படங்கள் இருக்கலாம். அனைத்தையும் ஸ்க்ரின்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் url-ஐயும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீதிமன்றம் நாட வேண்டியிருந்தால் இவையெல்லாம் தேவைப்படும்.

3) நல்ல வழக்கறிஞரிடம் ஆலோசனைப் பெறுங்கள்:
சட்டம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்தான். ஆனால், அதில் இருக்கும் ஓட்டைகளை பெரும்பாலும் நாம் அறிவதில்லை. அதைக் குற்றவாளி பயன்படுத்தி தப்பிக்காமல் இருக்க, வழக்கறிஞரிடம் பேசுங்கள். உங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் காட்டுங்கள். வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் உண்மையிலே உங்களை அவதூறு செய்வதாக இருந்தால் அவர் எடுத்துச் சொல்வார். அதன் பின்பே நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ நாடுவது நலம்.

4) புகார் செய்வது:
வழக்கறிஞரின் ஆலோசனைப்படி, காவல்துறையிலோ, நீதிமன்றத்திலோ புகார் தெரிவியுங்கள். நீங்கள் குற்றம் சுமத்தும் ஆளுடன் உங்கள் உறவு, குற்றத்தின் அளவு ஆகியவற்றை வைத்து நீங்கள் புகார் சொல்வது காவல்துறையா, நீதிமன்றமா, உங்கள் அலுவலக ஹெச்.ஆரா அல்லது கல்லூரி முதல்வரா என்பதை முடிவு செய்ய வேண்டும். அரசுசார் அமைப்பிடம் புகார் தெரிவித்தால் உங்கள் வழக்கறிஞர் உடன் இருப்பது அவசியம்.

5) செலவுகள்:
தீவிர மன உளைச்சல் மட்டும் அல்ல; இதனால் பெரும் பொருட்செலவும் ஆகும். சட்டத்தின் முன் சென்றுவிட்டால், உங்களுக்கு ஆகும் செலவுகளையும் குற்றவாளியிடம் கேட்டுப்பெறலாம். அதனால் இந்தப் பிரச்னைக்காக நீங்கள் செலவு செய்யும் அனைத்தையும் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். ரசீதுகளை பத்திரப்படுத்துங்கள்.

இவை அனைத்தையும் விட, நடந்ததை உங்கள் குடும்பத்தார், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களை யாரும் தவறாக நினைத்துவிட மாட்டார்கள். அவர்களின் அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு இந்த மாதிரியான நேரத்தில் தேவை.

மீண்டும் சொல்கிறேன். உங்களுக்குத் தெரியாமல் நிகழும் இதுபோன்ற சம்பவங்களால் உங்கள் மதிப்பு குறையப்போவதில்லை. அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*