பெண்களே யாரேனும் பாலியல் தொந்தரவு கொடுத்தால்!

பிறப்பு : - இறப்பு :

உலகில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்வது அவசியமாகிறது.

பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால், கீழே கூறப்பட்டுள்ள எளிய முறைகளின் படி எதிராளிகளை தாக்குவதன் மூலம் தங்களை பாதுகாத்த கொள்ள முடியும்.

மூக்கு மற்றும் தாடையில் தாக்குவது

உள்ளங்கை குதியெலும்பால் நேராக எதிராளியின் மூக்கிலோ அல்லது தாடையிலோ தாக்க வேண்டும்.

அந்த சமயத்தில் நமது இன்னொரு கையை நம் முகத்துக்கு நேராக எதிராளி நம்மை தாக்காதவாறு வைத்து கொள்ள வேண்டும்.

வயிற்று பகுதியில் தாக்குவது

எதிராளியை தளர்வூட்ட அந்த அடி பயன்படும். அதாவது, நம் இரு கையால் எதிராளியின் கழுத்தை பிடித்து கொண்டு வேகமாக கால் முட்டியை வைத்து அவர்களின் வயிற்றின் கீழ் பகுதியில் அடிக்க வேண்டும்.

பிடியிலிருந்து தப்பிக்க

நம்மை யாராவது பின்னால் வந்து இறுக கட்டி பிடித்து கொண்டால், உடனே நம் கைகளை தூக்கி உடனே அவர்களை கைகளை இறுக பிடிக்க வேண்டும்.

பின்னர், தலையை திருப்பி அவர்கள் கைக்கு கீழ் குனிந்து தாக்க வேண்டும்.

இடுப்பு பிடியிலிருந்து தப்பிக்க

இடுப்பை எதிராளி இறுக பிடிக்கும் போது டக்கென கைகளின் முட்டியால் அவர்களின் கீழ் வயிற்று பகுதியில் தாக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் நிலைதடுமாறும் போது, டக்கென திரும்பி நம் முழங்கையால் அவர்கள் மார்பு பகுதி ஓங்கி குத்த வேண்டும்.

பின்னர் அங்கிருந்து தப்பிக்கலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit