தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சி தரும் மர்மங்கள் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

உலகின் சிறப்பு வாய்ந்த அதிசயங்களுள் ஒன்று தாஜ்மஹால் இது காதலின் நினைவு சின்னமாக விளங்குகிறது. மற்றும் அது முகலாயர்கள் கட்டுமானத்தின் புகழுக்கும் உலக அளவில் பெயர்பெற்றது.

முகலாய மன்னரான ஷாஜகான் அவரது காதல் மனைவி மும்தாஜ் மஹாலுக்காக கட்டியதுதான் தாஜ்மஹால். தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே பாகம் 2! தெரியுமா?

பொதுவாக இந்து மதக் கோயிலுக்குள் செல்லும்போதுதான் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு செல்வார்கள். அப்படி இருக்கையில் மும்தாஸின் கல்லறைக்குள் செல்கையில் ஏன் காலணிகளை கழற்ற வேண்டும் என்கின்றனர். இதிலிருந்து இது ஒரு இந்து மத வழிபாட்டுத் தலம் என்கிறார்கள்.

இதுகுறித்து இன்னொரு தரப்பினர் கூறுகையில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் காலணிகளை கழற்றிவிட்டு, கால்,கை முகம் கழுவிதான் தொழுகையில் ஈடுபடுவார்கள். என்கின்றனர்

அதுமட்டுமின்றி தாஜ்மஹாலின் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு இடங்களில் சிவனின் அடையாளங்கள் குறிக்கப்பட்டுள்ளது என வாதிடுகின்றனர். சிவ அடையாளங்களாக அவர்கள் குறிப்பிடுவன எவை தெரியுமா

ஓம்

சில இடங்களில் ஓம் என்று அடையாளமும், சில இடங்களில் சிவனின் உருவமும் இருப்பதாக கூறுகின்றனர். யானை மீது இறைவன் அமர்ந்திருக்கும் உருவமும் இருப்பதாக எடுத்துரைக்கின்றனர்.

இந்த அடையாளங்களில் இந்திய தொல்லியல் துறை குறியீடுகள் இருப்பதாக அதிர்ச்சியளிக்கின்றனர் அவர்கள். இதை வெளியே சொல்லாமல் மூடி மறைக்கின்றனர் எனவும் சில ஆராய்ச்சிகளில் வெளியே வந்துள்ளது. தொலை தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து சில விசயங்கள் நமக்கு தெரிய வருகின்றன.

அவற்றில் தாஜ்மஹால் ஒன்று இல்லை மூன்று எனத் தெரிகின்றன

தாஜ்மஹாலின் துணை மஹால்

தாஜ்மஹாலின் இரண்டு புறமும் தாஜ்மஹாலை சரியாக இரண்டாக பிளவிட்டு கட்டியாற்போல மேற்கு நோக்கி ஒன்றும் கிழக்கு நோக்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்கள் பார்க்கையில் தாஜ்மஹாலின் சரியாக இரண்டு பாதியாக தெரிகின்றன.

எண்முகி வடிவ கிணறு

எண்முக வடிவில் கிணறு ஒன்று சூரியன் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது இந்து மதத்திலேயே வழக்கமானது என்கின்றனர் அவர்கள்.

இந்து கடவுளர்களின் ஆயுதமாகி ய திரிசூல வடிவம் தாஜ்மஹாலிலும் உள்ளது. இது துருப்பிடிக்காத தன்மை கொண்டது என்பது சில புகைப்படங்களின் வாயிலாகவும், ஆராய்ச்சிகளின் மூலமாகவும் தெரிய வருகிறது.

இந்துக்கள் கோயில்களில் வைக்கப்படும் கும்பப்பானை போல இந்த கட்டிடத்திலும் காணப்படுகிறது. அதுமிட்டுமின்றி இதில் சிவ அடையாளங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.

செந்தாமரை, திருசூலம்

தாஜ்மஹாலின் நான்கு உயர்ந்த நுழைவு வாயில்களிலும் செந்தாமரை திரிசூலம்போல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதுவும் இந்து கோயில்களில் உள்ளதாகும்.

உச்சவரை ஓவியங்கள்

இந்து கோயில்களில் கோபுரம் உட்பட உச்சம் வரை ஓவியங்கள் வரைவது வழக்கம். அதுபோலத்தான் தாஜ்மஹாலிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

அன்பே சிவம்

சிவனுக்கே உரிய ஊமத்தம்பூ இந்த கட்டிடத்தில் அநேக இடங்களில் வரையப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அவர்கள்.. இவையெல்லாம் தற்செயலாக இருந்ததா அல்லது உண்மையாவே உள்ளதா என புரியவில்லைதானே.

ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு மாதிரி தெரியும் என்பதால் இதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். எது எதுவானாலும் தாஜ்மஹால் ஒரு காதலின் சின்னம். அதை மதத்துக்கான சின்னமாக பார்க்காமல் அன்பு தான் முக்கியமாக காண்போம். அன்பே சிவம் … அதானே நம் இந்தியர்களின் மனது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit