உங்க ஃப்ரண்ட் உங்களை லவ் பண்ணுறாரான்னு தெரிஞ்சுக்கணுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

love

உங்கள் நண்பன் உங்களை காதலிக்கிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

தற்போது ஒருவருக்கு காதலானது எப்போது வருகிறது என்றே சொல்ல முடியாது. அதிலும் பெண்களை விட ஆண்கள் தான் காதலில் விரைவில் விழுந்துவிடுகிறார்கள். அப்படி காதலில் விழும் ஆண்கள் தங்களின் காதலை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். மாறாக அதனை உணர வைப்பார்கள்.

பொதுவாக காதலானது நட்பில் தான் ஆரம்பிக்கும். அப்படி நட்பில் ஆரம்பிக்கும் போது தான், ஆண்கள் தங்களின் காதலை செயல் மற்றும் உணர்ச்சியின் மூலம் சிறப்பாக அசரும் வகையில் வெளிப்படுத்துவார்கள். இங்கு உங்கள் ஆண் நண்பன் உங்களை காதலித்தால் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

* காதலில் இருக்கும் ஆண்கள் நண்பர்களாக இருக்கும் போது செய்யும் போனை விட அதிகமாக காரணமே இல்லாமல் அடிக்கடி போன் செய்வார்கள்.

* உங்கள் நண்பன் உங்களை காதலித்தால், விடுமுறை நாட்களில் கூட ஏதேனும் காரணத்தை சொல்லிக் கொண்டு உங்களைக் காண வருவான்.

* இதுவரை உங்கள் பிறந்த நாளைக் கண்டு கொள்ளதவர், காதல் வந்த பின்னர், முதல் நபராக வாழ்த்துக்களை தெரிவிப்பார். அதுமட்டுமின்றி, அந்நாளில் எதிர்பார்க்காத வகையில் நீண்ட நாள் ஆசையாக மனதில் வைத்திருக்கும் பொருட்களை வாங்கிக் கொடுத்து, மகிழ்விப்பார்கள்.

* இதுவரை உங்களின் மற்ற ஆண் நண்பர்களை நீங்கள் தொட்டுப் பேசுவதைக் கண்டு கோபப்படாத அவர் திடீரென்று கோபப்பட்டால், அவர் உங்களைக் காதலிக்கிறார் என்று அர்த்தம்.

இதுப்போன்று நிறைய அறிகுறிகள் உள்ளன. இத்தகைய கோபம், அக்கறை, பரிசு போன்றவை நட்பில் இருந்தாலும், காதலில் இருக்கும் ஆண்களின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரியும். எனவே வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit