உங்க காதல் பிரேக் அப் ஆகப் போகிறது என்பதை வெளிப்படும் அறிகுறிகள்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது அனைவருக்கும் மிகவும் எளிமையான ஒன்று தான், ஆனால் இந்த உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது கடினமானதாகும். சொந்த-பந்தம், கணவன்-மனைவி, நண்பர்கள் என எல்லாவற்றிலும் நீண்ட கால உறவு இன்றைய காலகட்டத்தில் வெறும் எதிர்பார்ப்பாகவே இருக்கின்றது.

இங்கு உறவுகள் முற்றிலும் முறிந்து போக என்ன காரணம் என்பதைப் பற்றிப் பார்ப்போமா.?

நல்ல உறவுக்குத் தேவை பரஸ்பர மரியாதை தான். காதலோ அல்லது நட்போ, ஒருவருக்கு ஒருவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு நடந்து கொள்வது அவசியம். அப்படியின்றி, ஒருவரையொருவர் அடிக்கடி சீண்டிக் கொண்டிருந்தாலோ, புண்படுத்திக் கொண்டிருந்தாலோ அந்த உறவுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வந்துவிடும்.

இரண்டு பார்ட்னர்களும் ஒரேவிதமான மனநிலையுடன் எப்போதும் இருந்தால் தான் ஆரோக்கியமான, நீண்டகால உறவுக்கான அடித்தளமாக இருக்க முடியும். இந்த அடிப்படை அம்சம் கூட இல்லாத வாழ்க்கை, எந்த நிமிடத்திலும் துண்டிக்கப்படலாம்.

எல்லா உறவுகளிலும் சில ஏற்றத் தாழ்வுகள் இருப்பது சகஜம் தான். இருவருக்கிடையில் அடிக்கடி விவாதங்கள் ஏற்பட்டாலும், அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால், அவர்களுடைய உறவில் ஏற்படும் விரிசலும் அதிகரித்துக் கொண்டு தான் செல்லும்.

சொந்தமோ, காதலோ, நட்போ… எந்த உறவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியம். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவர் திளைக்கும் போது முறையே அந்த மகிழ்வையும், சோகத்தையும் பகிர்ந்து கொள்ள அடுத்தவர் நேரத்தை ஒதுக்கவில்லை எனில், அந்த உறவு விரைவில் முறிந்து விடும்.

ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருடைய பார்ட்னர் அந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தால் அவருக்கு அந்த உறவு போரடித்து விட்டது என்று தான் அர்த்தம். இருவரும் இதுகுறித்துப் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்தால் நல்லது. இல்லாவிட்டால் அந்த உறவுக்கு உடனே என்ட்-கார்டு தான்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*