காதலியைத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் முதலில் இதைத் தெரிஞ்சிகோங்க!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அடுத்த நொடி என்ன நடக்கப் போகிறது என்பதைத் துளியும் அரிந்திராத நம் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானதாகும். பேச்சிலராக இருக்கும் போதும், திருமணமான பின்பும் ஆண், பெண் இருவரது வாழ்க்கையும் முற்றிலும் மாறிவிடும்.

பல்வேறு திருப்பங்கள் நிறைந்த திருமண வாழ்க்கையில் வெற்றி பெற கணவன் மற்றும் மனைவி என இருவரின் ஒத்துழைப்பு மகிவும் அவசியமானது ஆகும். இங்குக் காதலித்துத் திருமணம் செய்து கொள்ள இருப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை வழங்கியுள்ளோம்..

உங்களின் துணைக்கு வெறும் காதலனாகவோ அல்லது கணவனாக மட்டும் இருப்பது போதாது. அவருக்கு ஆபத்து அல்லது பாதுகாப்பு வேண்டிய நேரத்தில் நல்ல காப்பாளராகவும் இருக்க வேண்டும். இது தான், நல்ல ஆண் மகன் வீரத்தின் அடையாளம். தோழனாக, தோழியாக நீங்கள் இருக்கும் போது, உங்களுக்கும் பிரிவுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும். நீங்கள் நண்பர்களாக இருந்தால், சண்டைகள் வந்தாலும் கூட அவை சுமுகமாக முடிந்துவிடும்.

மனம் உடைந்து போகும் தருவாயில், தோல்வியில் துவண்டு போகும் நேரங்களில், ஓர் நல்ல ஆலோசகராக இருத்தல் வேண்டும். இது, மனதை மட்டுமின்றி, உங்களின் வாழ்க்கையையும் மேலோங்க வைக்க உதவும்.
தவறுகள் செய்யும் போது தட்டிக்கேட்கவும், நல்லதை எடுத்துக் கூறவும் ஓர் நல்ல ஆசானாக இருக்க வேண்டியது அவசியம்.

இவ்வுலகிலேயே, நூறு சதவீதம் நம்பிக்கையானவர் என்று ஓர் ஆணும், பெண்ணும் கருதுவது அவர்களது துணையை மட்டும் தான். உங்கள் இருவர் பற்றிய ரகசியம், அந்தரங்க விஷயங்கள், குடும்பச் சூழல் போன்றவற்றைக் கட்டிக்காக்க நம்பகமானவராக இருக்க வேண்டும். மனதளவில், ஆணும் பெண்ணும் சரிபாதியாக இருக்க வேண்டும்.

கொஞ்சுதல், அடம்பிடித்தல் போன்றவையும் ஓர் உறவில் இடம் பெற வேண்டும். அதற்கு இந்தக் குழந்தை வேடத்தைக் கட்டாயம் நீங்கள் ஏற்க வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*