23 பேரை பலியெடுத்த மீதொட்டமுல்ல அனர்த்தம்! காரணம் வெளியானது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வெளியிடங்களிலுள்ள குப்பைகளைக் தொடர்ந்தும் கொண்டுவந்து கொட்டியதன் காரணமாகவே மீதொட்டமுல்ல அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் கொலன்னாவை நகர சபை ஆணையாளரை பல முறை அறிவுறுத்தியிருந்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த அனர்த்தத்தில் 23 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்வதாக அவர் கூறியுள்ளார். மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் தான் முன்கூட்டியே அறிந்துவைத்திருந்தேன்.

வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகளை குறித்த பகுதியில் கொட்டுவதற்கு இடமளிக்க வேண்டாம் என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தேன்.

அத்துடன், குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக தயவு காட்டாது வழக்கு தொடருமாறும் பணிப்புரை விடுத்திருந்ததாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் சரியான முறையில் பின்பற்ற தவறியமையே குறித்த அனர்த்தம் ஏற்பட காரணம் என தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அணுகுமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்காது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இதன் மூலம் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு தேவையான சகல வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*