சரிவிலிருந்து மீட்பதற்காக பன்னாட்டு நிறுவனம் புதிய டெக்னிக்கை கையாண்டுள்ளது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின் போது வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் குரல் கொடுத்தனர்.

இதன் எதிரொலியாக தமிழகத்தில் மார்ச் 1 முதல் வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சி போன்றவற்றை விற்பனை செய்வதில்லை என தமிழக வியாபாரிகள் சங்கம் முடிவெடுத்து அதனை செயல்படுத்தவும் செய்தது.

இதனால் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதநீர் போன்றவற்றின் மீது மக்கள் பார்வை திரும்பியது. இதனை தொடர்ந்து இயற்கை பானங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக், பெப்சி போன்றவற்றின் விற்பனை பெருமளவில் சரிவை சந்திக்க தொடங்கியது. இதனால் சரிவிலிருந்து மீட்பதற்காக பன்னாட்டு நிறுவனம் புதிய டெக்னிக்கை கையாண்டுள்ளது.

பிரபல குளிர்பான நிறுவனமான பெப்சி தனது பெயரை தமிழில் மாற்றி விற்பனை செய்யும் ஏமாற்று வேலையை தொடங்கியுள்ளது. பெப்சி என்ற பெயலை ‘கெத்து’ என்று தமிழில் மாற்றி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. சூப்பர் மார்க்கெட்டுக்களில் இவை அதிகம் விற்பனைக்கு உள்ளன.

இந்த புதுப்பெயர் கொண்ட பெப்சி பாட்டில்களில் அந்நிறுவனத்தின் அடையாளம் அதிகம் தெரியாதபடி, லோகோவை கூட சிறியதாக ஓரத்தில் போட்டிருக்கிறது.

பெயரை மாற்றினால் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று குறுக்குவழியில் செல்லும் பெப்சியை மக்கள் இன்னும் கடுமையாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவற்றை விற்பனை செய்யும் கடைகளில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*