பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகள் சில!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய்தான் உண்டாகும் என்று இல்லை, அதனை தவிர்த்து வேறு சில மோசமான பிரச்சனைகளும் மார்பகத்தில் உண்டாகிறது.

இக்காலத்தில் பெண்கள் உடலில் வரைமுறையின்றி டாட்டூக்களை போட்டு கொள்கின்றனர். இதில் பயன்படுத்தப்படும் நச்சுமிக்க பொருளானது சரும புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடியது.

மேலும் எய்ட்ஸ் போன்ற நோய் உள்ளவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திய உபகரணங்களை மற்றவர்களுக்கு பயன்படுத்தினால் எச்.ஐ.வி., ஹைபடைடிஸ் பி மற்றும் சி போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

வியர்வை சுரப்பிகள் மற்றும் பால்குழாய்களில் ஏற்படும் அடைப்பானது நோய்தொற்றினால் ஏற்படக்கூடியது. இதனால் மார்பகம் சிவப்பாதல், வீக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

சில சமயங்களில் மார்பகங்களினுள் தீங்கு விளைவிக்காத திரவம் நிறைந்த கட்டிகள் உருவாகி வலியினை உண்டாக்கும். மாதவிடாய் காலங்களில் இந்த கட்டிகள் பழுத்து அதிக வலியினை உண்டாக்கும்.

மார்பக நாளங்களில் வீக்கம் ஏற்பட்டால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் வீங்கி, பருமனாகி தொட்டாலே அதிக வலியினை ஏற்படுத்தும்.

மார்பக காம்புகளின் வழியே இரத்தம் கலந்த திரவம் வெளிவந்தால் புற்றுநோய் அல்லாத கட்டிகள் உள்ளதென்று அர்த்தம்.

இது பாப்பில்லோமா என்னும் வைரஸானது பால் குழாய்களில் அதிகம் வளர்ச்சி அடைந்ததால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இப்பிரச்சனை ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும்.

பெண்களின் மார்பகம் வீங்குதல், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை ஏற்படும் போது அதை சரி செய்ய முட்டைகோஸை மார்பகங்களில் அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பயன்பெறும் முறை #1

இம்முறையை செய்யும் முன்னர் ஒரு மணி நேரம் முட்டைகோஸை ஃப்ரிட்ஜில் வைக்கவும். குளுமை அடைந்த பிறகு, அதன் வெளிப்புற இலைகளை உரித்து வீசி விட்டு, இரண்டாம் அடுக்கு லேயர் இலைகளை எடுத்து பயன்படுத்த வேண்டும்.

பயன்பெறும் முறை #2

இரண்டாம் அடுக்கு இலைகளை பயன்படுத்தும் முன்னர் அதை இதமான நீரில் கழுவி கொள்ளுங்கள். அந்த முட்டைகோஸ் இலைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

பயன்பெறும் முறை #3

ஸ்டெம் பகுதியை நீக்கிவிடுங்கள். இலைகளை சரியாக மார்பக பகுதியில் நிற்கும் படி வைக்க வேண்டும். முலைகாம்பு பகுதியில் மட்டும் படாதபடி பார்த்துக் கொள்ளவும்.

பயன்பெறும் முறை #4

இப்போது சுத்தமான அந்த முட்டைகோஸ் இலைகளை மார்பகத்தை கவர் செய்தது போல கட்ட வேண்டும். இதை 20 நிமிடங்கள் வைத்திருந்தால் போதுமானது. அதன் பிறகு நீக்கிவிடலாம்.

நன்மைகள்

இதை மீண்டும், மீண்டும் தொடர்ச்சியாக செய்து வந்தால், மார்பகம் வீங்குதல், இரத்த நாளவீக்கம், மார்பக பகுதியில் வலி, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது மார்பகங்கள் அசௌகரியமாக உணர்தல் போன்றவை சரியாகும். உங்கள் மார்பகள் நலத்துடன் அல்லது நன்கு மாறுதல் ஏற்பட்டு இருப்பது போன்று உணரும் பட்சத்தில் இதை நீங்கள் நிறுத்திவிட வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*