நிந்தவூர் பிரதான வீதியில் புதிய ‘சதொச’ கிளை நவீன வசதிகளுடன் நேற்று திறந்து வைக்கப்பட்டது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

shop-open

சதொச நிறுவனத்தின் அம்பாரை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சதொச கிளையைத் திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஃறூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீட், தென் கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் உபவேந்தர் வீ.சீ.இஸ்மாயில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் ஹாஜியார் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- ‘ மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நாட்டின் நாலாபக்கங்களிலும் 500 சதொச கிளைகளைத் திறக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழே இன்று நிந்தவூர் கிளையும் நவீன வசதிகளுடன், கணனி மயப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு திறக்கப்படுகிறது’ எனத் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit