மேழத்திங்கள் வேனிற்கால புத்தாண்டு வழிபாடு!-(Photos)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேழத்திங்கள் வேனிற்கால புத்தாண்டு வழிபாடு சிறப்பாக சுவிற்சர்லாந்து பேர்ன் – அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் 14. 04. 2017 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிமுதல் சிறப்பாக நடைபெற்றது.
செந்தமிழொலி உலகில் பொங்கி யோங்க

ஈழம் சிறந்து விளங்கப் பேர்ன் ஞானலிங்கேச்சுரர்
வெண்பொரி ஞானாம்பிகை பாகன் இணையடி பணிந்து
மண்ணில் நல்லவண்ணம் உயிர்கள் வாழ வாழ்த்துகிறோம்…
எனும் வாழ்த்து ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களால் வெளியிடப்பட்டது.

ஈழத்தில் யாழ். இணுவை ஊரில் 11. 04. 2017 சிவப்பேறு அடைந்த பெரியண்ணா என அனைவராலும் அன்பாக அழைக்படும் சைவநெறிக்கூடத்தின் குருநாதருக்கு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் அமைந்திருக்கும் சிவஞானசித்திர்பீடத்தில் சிவஞானர் பெரியண்ணா சுவாமிகள் எனும் திருப்பெயர் இவ்வேளை சிவஞானசித்தர்பீட நிறுவனர் யோகன் ஐயா அவர்களால் வழங்கப்பட்டது.

templ-3

templ-1

templ-2

2018ம் ஆண்டு இணுவில் ஊரில் அமைந்திருக்கும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் பெரியண்ணா சுவாமிகள் சாமதி முன்றலில் அறிவு, செறிவு, சீலம் நோக்கும் பெருமண்டபம் அமைக்கும் திருப்பணிகள் நிறைவுற்று திருக்குடமுழுக்கு நடைபெறும் எனும் செய்தியும் அறிவிக்கப்பட்டது.

பல் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக்கூடி விருந்தாக அருளமுதினைப் பெற்று பெரும் சிவன் வழிபாடு செந்தமிழ்த்திருமறையில் நடபெற, கருவறையில் தெய்வத் தமிழ் ஓங்கி ஒலிக்க பெரும் மகிழ்வுடன் நடைபெற்று 14.00 மணிக்கு வழிபாடுகள் நிறைவுற்றன.

மீண்டும் மாலை 17.30 மணிமுதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று இரவு 20.00 மணிக்கு கூட்டுவழிபாடும் இடம்பெற்றது. ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் மற்றும் அன்னை திருமகள் திருவலா வந்தருள சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இரவு 21.30 மணிக்கு இறையருட்பொருட்களும் அருளமுதும் வழங்கி வழிபாடுகள் நிறைவுற்றன

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*