முற்பதிவில் சாதனை படைத்தது Samsung Galaxy S8!

பிறப்பு : - இறப்பு :

சாம்சுங் நிறுவனத்தின் Galaxy S8 மற்றும் Galaxy S8 Plus கைப்பேசிகளுக்கான முற்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில் தென்கொரியாவில் மட்டும் 500,000 முற்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை 700,000 ஐ தொட்டுவிட்டதாக சாம்சுங் நிறுவனம் உத்தியோகபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

பல மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் இக் கைப்பேசிகளுக்கு உலக அளவில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இதன் காரணமாக அடுத்து வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் உலக அளவில் இக் கைப்பேசிகள் எதிர்வரும் ஏப்ரல் 21ம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் கொள்வனவில் புதிய வரலாறு படைக்கும் எனவும் நம்பப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit