11 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்களின் கதிரவன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தனது கன்னிப் பயணத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு “கதிரவனின் செய்தியில் காணுங்கள் உலகை“ , “ காலத்தின் கண்ணாடி கதிரவன்.கொம்“ என்னும் மகுடவாசகங்களுடன் mykathiravan.com என்னும் பெயரில் தமிழ்ப் புதுவருடத்துடன் தனது செய்திப் பயணத்தை ஆரம்பித்த கதிரவன் தத்தித் தளிர் நடை நடந்து இன்று தனது 11 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது.
முதன் முதலில் mykathiravan என்ற பெயரை வைக்கக் காரணம், mykathiravan என்று உச்சரிக்கும் போது அதனை உச்சரிக்கும் ஒவ்வொருவரும் தனது கதிரவன் என்று உணரவேண்டும் என்ற எண்ணத்தினாலாகும்.

பின்பு 2011 ஆம் ஆண்டில் kathiravan.net என்னும் பெயர் மாற்றத்துடன் தன் செய்திக் கதிர்களை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தோம்.

2012 இலே kathiravan.com என்ற பெயர் மாற்றத்துடன் ஆரம்பித்து இன்றுவரையிலும் செய்திப்ணியை ஆற்றிவருகின்றோம். com என இருந்தாலேயே நம்மவர்கள் அதனை இணையத்தளமாக பார்க்கும் நிலைகாணப்படுகிறது. அதனால் நாம் kathiravan.com என்ற பெயரைச் சூட்டினோம். எனினும் மேற்படி kathiravan.com என்ற பெயரானது ஏற்கனவே பதியப்பட்டிருந்ததினால் நாம் அப்பெயரைக் கொண்ட Domain ஐ உரிய பெறுமதியைக் கொடுத்துக் கொள்வனவு செய்திருந்தோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகாலத்தில் மிகக்குறைவான இணையத் தொழிநுட்பத்தையே கதிரவன் இணையம் இயங்கிகொண்டிருன்தது. காலப்போக்கில் படிப்படியாக  நாங்கள்  தொழிநுட்பத்தினை வளர்த்து இன்று முற்றிலும் நவீன தொழிநுட்ப வளத்தினைக் கொண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டு புது மெருகூட்டப்பட்டு கவர்ச்சிரமான பக்கங்களில் செய்திகளைத் தாங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிரவனின் இந்தப் பயணத்தில் தடங்கல்கள் பல வந்தபோதும் சிறிதும் மனந்தளராமல் அவற்றைத்தாண்டி வீறுநடை போட்டு வருடங்கள் எட்டைக் கடந்து ஒன்பதில் காலடி வைக்கும் இத்தருணத்தில் வாசகர்களாகிய உங்களை எண்ணிப்பார்க்கும் போது மகிழ்ச்சியடைகிறோம்.

உண்மையில் கதிரவனின் இந்த வளர்ச்சிக்கு வாசகர்களாகிய நீங்களும் விளம்பரதாரர்களும் நலன் விரும்பிகளுந்தான் காரணமெனின் அது மிகையில்லை.

உங்கள் கதிரவன் தன் பணியை சிறப்பாக ஆற்ற வாசகர்கள், விளம்பரதாரர்கள், அன்பர்கள், நண்பர்கள் ஆகிய நீங்கள் இப்போது தரும் ஆதரவைப்போல் பன்மடங்கு ஆதரவை இனிவரும் ஆண்டுகளில் தந்துதவ வேண்டும் எனக உரிமையோடு கேட்டு நிற்கின்றோம்.

“கதிரவனின் செய்தியில் காணுங்கள் உலகை“  “ காலத்தின் கண்ணாடி கதிரவன்.கொம்“

என்றென்றும் வாஞ்சையுடன் உங்கள் கதிரவன் குழுமம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*