ஜெயலலிதா இறந்ததற்கு முதல்நாள் ஹப்பல்லோவில் நடந்த சம்பவம்!! நடிகர் மனோபாலா திடுக்கிடும் தகவல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

apalao

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களின் ஒருவரான மனோபாலா , கடந்த தினத்தில் ஊடகமொன்றிற்கு வழங்கியிருந்த பேட்டியில் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பில் திடுக்கிடும் தகவலொன்றை தெரிவித்துள்ளார்.

அவர் அதில் பேசியதாவது நான் டிசம்பர் 4ம் திகதி ஜெயலலிதாவை பார்ப்பதற்காக ஹப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு சிறு பரபரப்பு இருந்தது.

லிஃப்டில் மேல் தளத்திற்கு சென்று பார்த்தால் அத்தனை எம்.எல்.ஏக்களும் இருந்தனர். ஒரே மௌன களமாக இருந்தது. எனக்கு சினிமா படம் பார்ப்பது போல இருந்தது.

ஒரு அமைச்சரின் மைத்துனர் வேகமாக என்னிடம் வந்து அண்ணா ஷூட்டிங் இருந்தால் உடனே கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு போங்க என்று கூறினார்.

ஏதோ நடக்கப்போகிறது என நினைத்து நானும் உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்தேன். மறுநாள் வரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

நான் ஏன் கேன்சல் செய்தேன் என இதுவரைக்கும் புரியவில்லை என அவர் கூறினார். ஆனந்த் ராஜ், விந்தியா ஆகியோரை பாராட்டுகிறேன். அவர்களை போல எனக்கு தைரியமில்லை என பேசினார்.

டிசம்பர் 5ம் திகதிதான் முதல்வர் ஜெயலிதா இறந்ததாக வெளிஉலகிற்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit