மகிந்தவை அடக்க மைத்திரியின் மகள்?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமகால அரசாங்கத்தில் எந்தவித பிளவுகளும் ஏற்படக் கூடாது. இந்த அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும். அதற்காக அரசாங்கத்தின் பிரதான இரண்டு தரப்பும் பொது சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என அரசாங்கத்தின் பிரதான கட்சிகளிடமும் சிவில் அமைப்பினர் கேட்டுள்ளனர்.

இரண்டு பிரதான கட்சிகளும் சேர்ந்த போட்டியிடா விட்டால், அது பாரிய சவாலாக மாறும். இதன்மூலம் மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மொட்டு சின்னத்தில் வெற்றி பெறும்.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்சவை தோல்வியடைய செய்து மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என ஆரூடம் வெளியிட்ட தரப்பினராலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அப்படி நடந்தால் அது கூட்டு அரசாங்கத்தின் இறுதி எனவும், ஜனாதிபதியின் முழுமையான அதிகாரம் வீழ்ச்சியடைய ஆரம்பித்து விடும். சமகால ஜனாதிபதியை சுற்றியிருக்கும் பல அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அவரைவிட்டு செல்லும் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பொலன்னறுவை மாவட்டத்தை அரசாங்கம் வெற்றி பெறுவதற்கும், வடமத்திய மாகாணத்தின் அதிகாரம் மொட்டு சின்னத்திற்கு செல்வதனை தடுப்பதற்கும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அன்னம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமத்திய மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா சிறிசேன போட்டியிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அவரது பிரபல தன்மைக்கமைய மொட்டு சின்னத்தின் முதலமைச்சர் வேட்பாளரும் அநுராதபுரத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.சந்திரசேனவுக்கு சவாலாக போட்டியிட வைக்க முடியும்.

இது தொடர்பில் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கட்சியின் உள்ளக தகவல்களை அடிப்படையாக கொண்டு கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிளவுபட்ட செயற்படும் உறுப்பினர்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*