ஆண்கள் இதனை கட்டாயம் சாப்பிடவேண்டும்! ஏன் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

கோடையில் நாம் அனைவரும் மிக விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. இதில் அதிகளவு நீர்ச்சத்து, பொட்டாசியம், லைகோபீன் நிறைந்துள்ளது. உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மை உடையது.

தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் கடினமான தோல் பகுதியை நாம் கீழே போட்டுவிடுவோம். ஆண்கள் கட்டாயம் அதனை சாப்பிட வேண்டும். இதனால் ஏற்படும் பலன்கள் ஏராளம்.

தர்பூசணியின் ஓட்டுப்பகுதியில் சிட்ருலீன் என்ற அமினோ அமிலமானது உள்ளது. இது தசை வளர்ச்சிக்கு உதவக்கூடியது. எனவே, ஜிம்மில் உடற்பயிற்சியினை மேற்கொள்பவர்கள் இதனை சாப்பிட்டால் தசை வளர்ச்சி கூடும்.

தர்பூசணியின் தோலில் உள்ள அதிகளவு நார்ச்சத்தானது கடின உப்புக்களை கரைத்து வெளியேற்றி உடல் எடையினை குறைக்க செய்கிறது.

இதன் தோல் பகுதியினை சாப்பிடும் போது இரத்த அழுத்தமானது குறைவது மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகமாலும், கிருமி தொற்று ஏற்படாதவாறும் தடுக்கிறது.

தர்பூசணியில் உள்ள லைகோபீனானது புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் ஆண்களுக்கு உண்டாகும் புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாவதை தடுக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit