தோ்தல் ரத்து..? டிடிவி தினகரன் கைது..? தோ்தல் ஆணையம் சாட்டையை கையில் எடுக்குது..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சசிகலாவைப்போல தினகரன் சிறையில் அடைக்கப்பட்டு, இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவை, எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையில் ஒன்றாக்க வேண்டும். இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் பிளான் என்கின்றனா் அரசியல் வல்லுனர்கள். அதனை நோக்கியே அதிமுக அரசியல் கட்சியும் சென்று கொண்டு இருக்கிறது.

ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அந்த தொகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு ஓட்டுப்போட, வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழங்கப்பட்டது.

இதுபற்றி திமுக, ஓபிஎஸ் அணியினர் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்தனர்.

டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக செயல்படும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவரது உதவியாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடு, நடிகர் சரத்குமார் வீடு, எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் வீடு என தமிழகத்தில் 35 இடங்களில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு சுமார் ரூ.89 கோடி வரை பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரம் சிக்கியது. மேலும் கணக்கில் காட்டப்படாத ரூ.6 கோடிக்கு மேல் ரொக்கப்பணமும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்தஆவணங்கள் அனைத்தும் ஆர்.கே.நகர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ராவிடம் அளித்தனர். அவரும் நேற்று வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினார்.

மேலும் 35 இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விக்ரம் பாத்ராவும் தனது அறிக்கையை அனுப்பியுள்ளார். இதையடுத்து டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நேற்று மதியம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் இந்த கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு, இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விக்ரம் பாத்ரா நேற்று மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அவசரமாக டெல்லி சென்றார். டெல்லியில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்,

தமிழகத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், உதவியாளர்கள் வீடுகளில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படிதான், ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வருகிற 12ம் தேதி நடத்தலாமா? அல்லது சில நாட்களுக்கு தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னையில் உள்ள தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கட்சியினர் பணம் கொடுத்தது வருமான வரித்துறை சோதனையில் ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் பெறுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதுபற்றி தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தி முடிவு எடுக்கும்.

தற்போது தேர்தலை தள்ளி வைத்தாலும், இன்னொரு நாளில் தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும்.

அப்போதும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்வார்கள். இதுபோன்ற தர்மசங்கடமாக நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய முடிவை விரைவில் அறிவிக்கும் என்றார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பா ளர்கள் ரூ.28 லட்சம் மட்டும் செலவு செய்யலாம். ஆனால் ஒருவேளை தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி அடைந்தாலும், 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தேர்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதனால், தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து, இப்படி வாக்காளர்களுக்கு வழங்கிய பணத்தை சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர் கணக்கில் சேர்த்து, அந்த வேட்பாளரை தொடர்ந்து 3 ஆண்டுகள் தமிழக தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழக தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ரா, நேற்று மாலை அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியும் இன்று காலை டெல்லி வரும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனால் இன்று காலை அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணம் பட்டுவாடா செய்தது அனைத்தையும், தினகரன் கணக்கில் சோ்த்தால் அவா் தோ்தலில் வெற்றிப் பெற்றாலும், அது செல்லாது. சட்டப்படி அவா் 3 ஆண்டுகள் தோ்தலில் நிற்க முடியாத நிலை ஏற்படும். அவா் சிறைக்கு செல்லும் நிலைக்கூட ஏற்படலாம். இவ்வாறு அவா் தெரிவித்தார்.

அவ்வாறு நடந்தால் பாரதிய ஜனதாவின் கணக்குபடி, அதிமுக பன்னீர், எடப்பாடி தலைமையில் ஒன்றாக இணையும். அதிமுகவில் இருந்து சசி குடும்பம் அப்பறப்படுத்தப்படும் என்றும் பரபரப்பாக பேசி வருகின்றனா்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*