ஈழத் தமிழருக்குப் புதிய தலைமை?-சண் தவராஜா

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tamil

ஈழத் தமிழ் மக்களுக்குப் புதியதொரு தலைமை தேவை எனும் கோரிக்கை ஒன்று அண்மையில் தமிழ் அரசியல்வாதிகள் சிலரால் முன்வைக்கப்பட்டு இன்று ஊடகங்களில் பேசப்படும் ஒரு விடயமாக மாறியூள்ளது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டம் துயர முடிவைச் சந்தித்த பின்னான சூழலில் – சுமார் மூன்று தசாப்த காலமாக ஈழத்தமிழ் மக்களின் தலைமைப் பாத்திரத்தை வகித்து வந்த – தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணிப் பாத்திரம் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்களின் தலைமைப் பாத்திரத்தை ஏற்றுஇ அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்று பலத்த விமர்சனத்துக்கு ஆளாகிவரும் நிலையில் புதிய தலைமையின் தேவை தொடர்பிலான கருத்து முன்வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழ் மக்களுக்கு புதிய தலைமை தேவை எனக் கடந்த காலங்களில் வலியூறுத்திய பலரும் தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கையான தாயகம்இ தேசியம்இ தன்னாட்சி என்பவற்றுக்கு விரோதமாகவே இருந்து வந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. மிதவாதத் தலைவரான அ. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமை மாற்றப்பட்டு பேரினவாதிகளைத் திருப்திப் படுத்தக் கூடிய ஒரு தலைமை அமைய வேண்டும் என்பது எண்பதுகளில் அப்போதைய அரசுத் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அவாவாக இருந்தது.

பின்னாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தலைமை மாற்றப்பட வேண்டும் என்பது மாறி மாறிப் பதவிக்கு வந்த சிங்களத் தலைவர்களின் பெரு விருப்பமாக இருந்து வந்தது. தமிழ் மக்களுக்கு அடிப்படை அரசியல் உரிமைகள் எவையூம் வழங்கப்பட்டு விடக் கூடாது என்ற பேரவா கொண்டிருந்த இவர்கள் எந்த வகையிலாவது தமிழ்த் தலைமையை அழித்துவிட வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் செயற்பட்டுஇ பல்வேறு நாடுகளின் துணையோடு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டினர். கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் புலிகளை அழிப்பதில் அவர்கள் தம் மத்தியில் கருத்தொற்றுமை கொண்டிருந்தமையைக் காண முடிந்தது.

விடுதலைப் புலிகளின் தலைமையை ஒழித்துக் கட்டுவதில் தமிழர்கள் சிலரும் விருப்புக் கொண்டிருந்தனர். அவர்களின் விருப்பு என்பது தனிப்பட்ட ரீதியில் புலிகள் மீது கொண்டிருந்த வெறுப்பே அன்றி மக்கள் நலன் சார்ந்ததாகப் பெரிதும் இருந்திருக்வில்லை.விடுதலைப் புலிகள்; முற்றாக ஒடுக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டில் தமிழர்களின் ஒரேயொரு விருப்பத் தேர்வாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே இன்று கேள்விக்கு இலக்காகி இருக்கின்றது. எனினும்இ புதிய தலைமையை முன்மொழியூம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரே~; பிரேமச்சந்திரன் அவர்களோஇ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களோ 2009 ஆம் ஆண்டில் இன்றைய தலைமையை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருந்தனர். ஏனெனில்இ அன்றைய சூழலில் வேறு விருப்பத் தேர்வூ அவர்களுக்கும் இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கும் இருக்கவில்லை.

யூத்தம் முடிவூக்கு வந்த பின்னரான சூழலில் தமிழ் மக்கள் வாழ்ந்த கையறு நிலைமை படிப்படியாக மாற்றத்துக்கு உள்ளாகி – ஓரளவூ சுதந்திரமாக மூச்சு விடக் கூடிய – இன்றைய நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழர்களை அழிப்பதில் ஈவிரக்கம் இல்லாமல் செயற்பட்ட மகிந்த அரசாங்கம் அடுத்து என்ன தீங்கு செய்யூமோ என்ற அச்சத்தில் வாழ்ந்த மக்கள் படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பியதில் கூட்டமைப்பிற்குப் பெரும் பங்கு இருக்கிறது. இத்தகைய அணுகுமுறை அன்றைய காலகட்டத்திற்குத் தேவையானதாகவூம்இ வேறு மாற்றுத் தேர்வூ இல்லாததாகவூம் இருந்தது.

ஈழத் தமிழர் பிரச்சனையில் அன்று முதல் இன்று வரை தலையீடு செய்து வரும் இந்திய நடுவண் அரசுஇ “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சிக்குள் ஒற்றுமையைப் பேண வேண்டும்” எனக் கூறி வைத்துள்ள இன்றைய சூழ்நிலையில் புதிய தலைமை தொடர்பான கோரிக்கை முன்வைக்கப் படுவதானது கவன ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.
புதிய தலைமை தொடர்பான கோரிக்கையை வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களும் வழிமொழிந்து உள்ளார்.

இத்தகைய பின்புலத்திலேயே கூட்டமைப்பில் மிகுந்த விமர்சனத்துக்கு ஆளாகிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்களின் கொலை முயற்சி தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழ் ஊடகங்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்காத இந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால் தமிழர் அரசியல் மீண்டும் தொடங்கிய இடத்துக்கே செல்கிறதே என்ற ஐயம் உருவாகின்றது.

பொதுவில் தலைவர்கள் உருவாக்கப் படுவதில்லை. தாமாகவே உருவாகிறார்கள் என்பதே ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கிறது. மக்கள் மனதை வெல்ல முடியாதவர்கள் தலைமைப் பதவிக்கு வரும் போது என்ன நடக்கும்இ மக்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதற்கு தமிழ்நாட்டின் சமகால நிகழ்வூகள் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.ஈழத் தமிழ் மக்களுக்குப் புதிய தலைமை தேவையா இல்லையா என்பதை மக்களும்இ காலமுமே முடிவூ செய்யூம். காலத்துக்கு முந்திய தலைமை மாற்றம் என்பது “காயைத் தட்டிக் கனிய வைக்கும்” முயற்சியாகவே அமையூம்.

இந்தப் பத்தி சம்பந்தன் அவர்களை முன்னணிப் பாத்திரமாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய தலைமைக்கு வால் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட வில்லை. ஈழத் தமிழ் மக்கள் இதுவரை தலைவர்களாக அங்கீகரித்துக் கொண்ட அனைவருமே காலச் சூழல் காரணமாகத் தம்மைத் தலைவர்களாக உருவாக்கிக் கொண்டவர்களே அன்றி ஒருவராலோ அன்றி ஒரு கட்சியினாலோ தலைமைப் பதவிக்கு உயர்த்தப் பட்டவர்கள் அல்ல. மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்இ மக்கள் மனோநிலையை அறிந்து அதற்கேற்ப செயற்படுபவர் தலைவர் ஆவதை எவராலும் தடுத்துவிட முடியாது.

புதிய தலைமை தேவை எனக் கோருவோர் யாரை மனதில் வைத்துக் கொண்டு அவ்வாறு கூறுகின்றார்கள் எனத் தெரியவில்லை. ஆனால்இ அத்தகைய தலைமைப் பண்பைக் கொண்டஇ மக்களின் மனதை ஒட்டு மொத்தமாகக் கொள்ளை கொண்ட எவரும் ஈழத் தமிழர் மத்தியில் தற்போதைய நிலையில் தென்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit