பல்சமய இல்லத்தில் கலந்துரையாடலும் விருந்தோம்பலும் – (Photos)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பல்சமய இல்லம் (Haus der Religionen) என்பது 14. 12. 2015 சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் நிரந்தரமான இடத்தில் எட்டு உலகசயமங்கள் பங்காளர்களா உறுப்பு வகிக்க நிறுவப்பட்ட பொது அமைப்பாகும்.

இதில் சைவத்தமிழ்மக்களைப் பிரதிநிதிப்படுத்தி சைவநெறிக்கூடம் உறுப்பினராக உள்ளது. அவ்வகையில் ஐரோப்பாத்திடலில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழ் மக்களின் சமூக அமைப்பாகவும் விளங்குகின்றது.

ஆண்டு முழுவதும் ஞானலிங்கேச்சுசர் திருக்கோவில் வழமையான சடங்குகள் வழிபாடுகளுடன் உலக மற்றும் சுவிஸ் அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளிலும் பங்கெடுத்து வருகிறது.

பல்லினப்பண்பாடும் பல்சமய நிகழ்வுகளும் ஒரு இனம் மாற்று இனத்தைப் புரிந்து கொள்ளவும், அவர்களது வாழ்விலையும் இறை தேடலை கருத்தியல் தளத்தில் விளங்கிக்கொள்ளவும் பல்சமய இல்லத்தால் பல நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன.

அவ்வகையில் பல்சமய இல்லத்தின் முதன்மை இயக்குனராக விளங்கும் திரு. தாவித் லொயிற்வில்லெர் (David Leutwyler) அவர்கள் 06. 04. 2017 வியாழக்கிழமை மாலை 19.00 மணிமுதல் 21.30 மணிவரை பல்சமய இல்லத்தின் அடிப்படை நோக்கம் மற்றும் செயற்பாடுகளை விளக்கியதுடன், உண்மை (THE REAL und die Frutiger-Figur Nachdenken) எனும் தலைப்பில் ஒர் கலந்துரையாடலும் விருந்தோபலுடன் கூடிய கேட்போர் அரங்கினையும் நடாத்தியிருந்தார்.

bern

bern1

bernd

இதில் சைவநெறிக்கூடம் பங்கெடுத்து தமிழ்மக்களின் வாழ்வியலில் உயிர்ப்பு நிலையான சைவசித்தாந்தத்தையும் அதுபோல் இறையியல் நெறியினையும் தமது பார்வையில் இருந்து ஒப்பீடாக எடுத்துக்காட்டியது.

எண் சயமத்தவர்களும் கூடியிருக்க பல எடுத்துக்காட்டுக்களுடன் இறையியல் பேராசிரியர் திரு. யோன் கிக் (John Hicks THE REAL) அவர்களுடைய கோட்பாடும் அதன் வாழ்வியல் முறையும் வாதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

அக்கருத்தியலிற்கு வலிமை சேர்க்கும் அதுபோல் மாறுபட்ட சித்தாந்தங்களும் விவாதிக்கப்பட்டன. மேலும் பல்சமய இல்லத்தின் சின்னங்களும் அதன் பொருள்களும் கருப்பொருளாக விளக்கமும் அளிக்கப்பட்டது.

பன்நாட்டு சைவ உணவுகளும் சிற்றுண்டி விருந்தாக பல்சமய இல்லத்தால் அளிக்கப்பட்டு, சமயக்கோட்பாடுகளும் வாழ்வியல் முறையும் ஒவ்வொரு சமயத்தாலும் பயிலரங்காக நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*