மன அழுத்தத்தை தவிர்க்க சிறந்த மருந்து!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Women

உலகலாவிய ரீதியில் 300 மில்லியனுக்கும் அதிகமானோர் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார தினம் இன்றாகும்.

இதை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தை தவிர்க்க ‘மனம் விட்டு பேசுவோம்’ என்பது இம்முறை உலக சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2015 ஆம் ஆண்டின் மிதிப்பீட்டின்படி இலங்கையில் மன அழுத்தம் காரணமாக 8 லட்சத்து 2 ஆயிரத்து 321 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

மன அழுத்தமானது, தற்கொலைக்கு இட்டுச் செல்லும்.

உலகலாவிய ரீதியில் சுமார் 8 லட்சம் பேர் வருடாந்தம் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், மன அழுத்தத்தை தவிர்க்க மனம் விட்டு பேச வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், மனம் அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்பதற்காக உலக நாடுகளின் அரசாங்கங்கள் அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், மன அழுத்தம் தொடர்பான விடயத்தில் பயிற்றுவிக்கப்பட்ட மனித வளங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit