வருண் மணியன்’ மோகத்தில் வசந்தபாலனை மறந்த த்ரிஷா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகைகள் எப்போதுமே உஷார் பார்ட்டிகள்.

படம் எடுக்கும் இயக்குநர்களை விட அந்தப்படத்துக்கு கோடிக்கணக்கில் பணம் போடும் முதலாளிகளைத்தான் கைக்குள் போட்டுக்கொள்ள பசை போல ஒட்டிக்கொள்வார்கள்.

இதில் த்ரிஷாவும் தப்பவில்லை.

இளமை தாண்டிய வயதிலும் ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த கட்டுமான அதிபரும், காவியத்தலைவன் படத் தயாரிப்பாளருமான வருண்மணியனுக்கும் சில வாரங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த விஷயத்தை இன்றுவரை த்ரிஷாவும் அவரது அம்மா உமாவும் பொய் பொய் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது பொய் தான் என்பதற்கு ஆதாரமாக ஜெயம்ரவி, தனுஷ் ஆகியோரின் படங்களிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் த்ரிஷா.

இப்படி த்ரிஷா- வருண்மணியன் தொடர்புக்கு ஆதாரமாக பல உண்மைகள் பொது வெளியில் பேசப்பட்டாலும் எங்கே பட வாய்ப்பு குறைந்து விடுமோ என்கிற கவலை தான் த்ரிஷாவுக்கும், அவரது தாய்க்குலத்துக்கும்…

இருந்தாலும் இதுவரை வருண் மணியன் என்கிற பெயரைக் கூட உச்சரிக்காத த்ரிஷா முதல்தடவையாக ‘காவியத்தலைவன்’ படத்தைப் பாராட்டி தனது கருத்தை எழுதியிருக்கிறார்.

‘காவியத்தலைவன் படம், அந்த பட குழுவினரின் புத்திசாலித்தனமான முயற்சி. அற்புதமான நடிப்பு. சினிமா விரும்பிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை வழங்கியதற்காக வருண் மணியனுக்கு நன்றி’ என்று சிலாகித்திருக்கிறார்.

பணம் போட்ட தயாரிப்பாளர் வருண்மணியனை மறக்காமல் பாராட்டிய த்ரிஷா, அந்தப்படத்துக்கு திரைக்கதை எழுதி, இரவு பகல் பாராமல் உழைத்து படமாக்கிய டைரக்டர் வசந்தபாலனை பாராட்டவும் இல்லை, அவரது பெயரையும் குறிப்பிடவில்லை.

இது போதாதா த்ரிஷா, வருண் மணியனும் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்ட….?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*