மனித இனம் கண்டு பிடிக்கும் முதல் ஏலியன்கள் ரோபோட்டுக்களாக இருக்கும்!?:நிபுணர்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இன்றைய நவீன விண்வெளி யுகத்தில் பூமியிலுள்ள உயிர்வாழ்க்கை போன்று பிரபஞ்சத்தின் ஏனைய பாகங்களில் அறிவு வளர்ச்சியுடைய உயிரினங்களோ அல்லது ஏன் நமது சூரிய குடும்பத்திலுள்ள மற்றைய கிரகங்களில் நுண்ணுயிர் வாழ்க்கையேனும் இருக்கின்றதா என்ற தேடல் மனிதர்கள் மத்தியில் மிகவும் வலுப்பெற்றுள்ளது.

மேலும் பிரபஞ்சத்தின் ஏனைய பகுதிகளில் இருக்கக் கூடிய ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரக வாசிகளிடம் இருந்து சமிக்ஞைகளைப் பெறும் முயற்சியும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் கனெக்டிக்குட் பல்கலைக் கழகப் பேராசிரியரான டாக்டர் சுசன் ஸ்னெய்டெர் என்பவர் சமீபத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்த தகவலில் நமது மனித இனம் கண்டு பிடிக்கக் கூடிய முதல் வேற்றுக்கிரகவாசி உயிரினம் உயிரியல் சார்ந்ததாக இல்லாமல் AI எனப்படும் செயற்கை அறிவை உடைய ரோபோட்டுக்களாக அதாவது எந்திரங்களாகவே இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இது தவிர்ந்த வேறு இன அறிவுடைய ஏலியன்களை பூமியில் இருந்து நாம் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டினால் அப்போது இங்குள்ள புத்திசாலித்தன உயிர் வாழ்க்கை முற்றிலும் செயற்கை அறிவாக மாறி இருக்கும் என்றும் அவர் பரபரப்புத் தகவல் அளித்துள்ளார். வேற்றுக்கிரக வாசிகள் (Extraterrestrial intelligence) குறித்த கல்வியை டாக்டர் செத் ஷொஸ்டாக் உடன் இணைந்து மேற்கொண்ட சுசன் பிரபஞ்சத்தில் இருக்கக் கூடிய மிக முன்னேற்றமான ஏலியன் நாகரிகம் AI (Artificial intelligence) எனப்படும் செயற்கை அறிவு இன் பகுதியாகவே இருக்கும் என்றும் விளக்கப் படுத்தியுள்ளார்.

இவர் மேலும் கூறுகையில் இப்போது முதற்கொண்டே மனித இனத்தில் பெரும் பகுதி தமது அன்றாட வாழ்வில் பாரியளவில் கணணிகளை இணைத்துக் கொண்டு விட்டது என்றும் கணணிகளில் தகவல் பரிமாற்ற உபகரணமாகச் செயற்படும் சிலிக்கன் எமது மூளையை விட வேகமானது என்று தெரிவித்ததுடன் ஒரு தொலைபேசி இலக்கத்தை ஞாபகம் வைத்திருப்பது என்பது கூட எம்மில் பலருக்கு எவ்வளவு சிரமமானது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது கணணி அறிவியல் (Computer science) துறையில் கல்வி கற்று வருபவர்கள் எம்மை விட மிகவும் முன்னேற்றகரமான செயற்கை அறிவில் (AI) இருந்து நாம் குறைந்தது 50 வருட தூரத்தில் தான் உள்ளோம் என்றும் கூறுகின்றனர். எனவே எமது அடுத்த பரிணாமத்தின் கட்டமாக 50 வருடங்களில் நாம் கணணியில் ஒரு பகுதியாக எம்மை இணைத்துக் கொண்டு விடுவோம் அதாவது எமது மூளையுடன் இணையம் இணைந்து விடக் கூடும் என்கிறார் சுசன். மேலும் வருங்காலத்தில் எமது உடல் ரோபோக்களின் தன்மையை சிறிது சிறிதாகப் பெற்று விடும் கட்டத்தில் விண்வெளிப் பயணங்களுக்கும் எமது உடல் தயாராகி விடும் எனவும் சுசன் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை இன்னும் 20 வருடங்களுக்குள் மனித இனம் சூரிய குடும்பத்தின் ஏனைய பாகங்களில் புத்திசாலித்தனம் (intelligence) அற்ற நுண்ணுயிர் (microbial) வடிவிலான உயிர் வாழ்க்கை இருப்பின் அதனைக் கண்டு பிடித்து விடும் என நாசாவும் வானியலாளர்களும் கருதுவது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*