முன்னாள் போராளிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

JUdgemant

மட்டக்களப்பு நகருக்கு பேருந்தில் ஆயுதங்களை கொண்டுவந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு பேரையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து ஆயுதங்கள் சிலவற்றை பேருந்தில் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது குறித்த நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit