யாழில் மீண்டும் சரமாரியான வாள்வெட்டு : இளைஞர்கள் வைத்தியசலையில்!

பிறப்பு : - இறப்பு :

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத 4 பேர், வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கு நின்ற முச்சக்கரவண்டியையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், மட்டுவில் முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த பெரியநாயகம் பாலகுமார்(22) , சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ஜனார்த்தனன்(24) ஆகிய இரு இளைஞர்களே படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, படுகாயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தாக்குதலின் போது கழுத்து மற்றும் கைப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ் வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit