
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதவரளிக்கும் என மாதுலுவே சோபித தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைச்சாத்திடவில்லை. புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடாத போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பல்வேறு தரப்பினர் உத்தியோகப்பற்றற்ற வகையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.