வீட்டில் மீன்தொட்டியை இந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சரியான இடத்தில் மீன்தொட்டியை வைப்பதன் மூலம் செல்வவளத்தை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வீட்டில் எங்கு மீன் தொட்டியை வைக்க வேண்டும்?
  • வாஸ்துபடி, வீட்டில் மீன் தொட்டியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பதே மிகவும் சிறந்தது.
  • வீட்டினுள் நுழையும் போது, மீன் தொட்டி எப்போதும் இடது பக்கத்தில் இருப்பதே நல்லது.
  • மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் இருக்க வேண்டும். அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • மீன் தொட்டியில் உள்ள மீன்களின் நிறமும் முக்கியமானது. அதில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
  • வீட்டில் எப்போதும் மீன் தொட்டியை சமையலறையில் அல்லது படுக்கை அறையில் வைத்திருக்கக் கூடாது. இதனால் வீட்டில் பண இழப்பு ஏற்படும்.
  • மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்துக் கொள்ளுமாம். ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தமாம்.
  • மீன் தொட்டியில் நன்கு ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக, சுட்டித்தனமாக உள்ள மீன்களை வளர்த்தால், அது வீட்டினுள் செல்வ வளத்தை அதிகரிக்கும்.
  • மீன் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்தால், அது அளவுக்கு அதிகமாக தேவையற்றதை பற்றி சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.
  • மீன் தொட்டியில் உள்ள மீன் இறந்து விட்டால், அதை நீக்கிவிட்டு, இறந்த மீனின் நிறத்தில் மற்றொரு மீனை தவறாமல் வாங்கிப் போட வேண்டும்.
குறிப்பு

வீட்டில் இருக்கும் மீன் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு மனஅமைதி கிடைப்பதோடு, அந்த குடும்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*