கடற்புலிகளினால் கடத்தப்பட்ட கப்பல்கள்..! கொழும்பு ஊடகம் தகவல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை மாலுமிகள் 8 பேருடன் “ஆரிஸ் 13” என்ற எண்ணெய் கப்பல் அண்மையில் சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த காலங்களில் கடந்தப்பட்ட கப்பல்கள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கப்பல் கடத்தல் சம்பந்தமாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

1984ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கடற்படை ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் நாடு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் பணியாளர்கள், உபகரணங்களை கொண்டு செல்ல வேண்டிய தேவை கடற்புலிகளுக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்பரப்பில் கடற்புலிகளினால் எம்.வி. ஐரிஷ் மோனா, மலேஷியாவுக்கு சொந்தமான எம்.வி. சிக் யாங் மற்றும் ஜோர்தானுக்கு சொந்தமான எம்வி பராஹ் III ஆகிய கப்பல்கள் கடத்தப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 128 பயணிகளுடன் எம்.வி. ஐரிஷ் மோனா என்ற பயணிகள் படகு கடற்புலிகளினால் கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதன் போது உதவுவதற்கு முன்வந்த இலங்கை கடற்படையின் பீரங்கி படகுகளும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், 1999ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி தமிழகம் தூத்துக்குடியிலிருந்து 2818 டன் உப்பு ஏற்றி சென்ற மலேஷிய சரக்கு கப்பல் கடற்புலிகளினால் கடத்தப்பட்டதாகவும், குறித்த கப்பலில் இருந்த 63 பேரின் நிலை இருவரையிலும் தெரியவரவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2006ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தென் ஆபிரிக்கா நோக்கி பயணித்த ஜோர்தானிய சரக்கு கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக கப்பலில் இருந்தவர்களினால் அபாய குரல் எழுப்பினார்கள்.

இதன் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளினால் குறித்த கப்பல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்கள் கழிந்து கடற்புலிகளின் சிறிய படகு ஒன்றின் மூலம் குறித்த கப்பலில் இருந்தவர்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*