சந்திரிக்கா கதை முடிகிறதா..?? பாரிய வேலையில் மகிந்த கம்பனி….

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்பின்னர் அவர்களில் சிலர் கொடுத்த யோசனைகளை அடுத்து, அவர் மகிந்தரின் கட்சியில் உள்ள சிலருடன் பேசியுள்ளதாக இன்றைய தினம் செய்திகள் கசிந்துள்ளது.

இச்செய்தி மகிந்தரின் காதுகளுக்கும் எட்டியுள்ளதால், அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளதாக கொழும்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை சந்திரிக்காவை கைதுசெய்யமுடியுமா என்று ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளோடு இணைந்து இலங்கையின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டார் என்று, அல்லது தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுவதால் தேசிய பாதுகாப்பு சட்டம் ஊடாக அவரைக் கைதுசெய்ய முடியுமா என்று ஆராயப்படுகிறது. மகிந்தரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி வரும் சந்திரிக்காவை அடக்கினாலே போதும்.

வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் மகிந்தவின் குடும்பம் உள்ளது. இத்தேர்தலில் ஒருவேளை மகிந்தர் தோல்வியடைந்தால், அவரும் அவரது குடும்பமும் நடுத்தெருவுக்கு வரவேண்டிய நிலை தோன்றும் !

இன்யை அரசியலில் பாரிய சவாலாக விளங்கிவரும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா இலங்கை அரசியலில் இன்றைய ஜனாதிபதிக்கு பாரிய சவாலாக உள்ளார் இதனால் அவரை அழிப்பது தொடர்பில் கோத்தாபாய, சமல், பசில், மகிந்த மற்றும் அரசின் சில முக்கியஸ்தர்கள் 05.12.2014 மாலை 07.00 மணியளவில் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன் முன்னால் ஜனாதிபதியை ஒழித்தால் இன்றைய சிக்கலுக்கு தீர்வு கிடைத்துவிடும் என கோத்தாபாய ராஜபக்ச மகிந்தவிற்கு அறிவுரை கூறியதுடன் இதனை சமல் ராஜபக்ச நிராகரித்ததுடன் பசில் நடுநிலை வகித்ததாகவும் எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளதுடன்

கொழும்பு அரசியலில் பாரிய சவாலாக விளங்கும் விடயம், எதிர் வரும் வாரங்களில் விடைகலாக அமையலாம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*