கர்ப்பிணியான அக்சராஹாசன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்றைய அரசியல், அரசியல்வாதிகள் குறித்து கமல் கூறிய பல கருத்துக்கள் ஆக்கபூர்வமாக இருந்தாலும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு கோபத்தை வரவழைத்தது. குறிப்பாக மகாபாரதம் குறித்து கமல் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது வள்ளியூர் மற்றும் கும்பகோணம் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாபாரதம் குறித்து கமல் கூறிய கருத்துக்கு அவரது இளையமகளும், நடிகையுமான அக்சராஹாசனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

அப்பா எதையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுபவர். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் நிறைய இருக்கு. அவர் மேல் எழும் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்பதும், அதற்கு அவர் பதில் சொல்வது தான் சரியாக இருக்கும்’ என்று கூறினார்

மேலும் அஜித்துடன் ‘விவேகம்’ படத்தில் நடிப்பது குறித்து கூறிய அக்சராஹாசன், ‘விவேகம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன். அஜீத்துடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இந்த படத்தில் நான் நடிக்கும் கேரக்டர் குறித்து இப்போது எதுவும் சொல்ல இயலாது’ என்று கூறினார்.

மேலும் பாலிவுட் படம் ஒன்றில் இளம் கர்ப்பிணியாக நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அக்சராஹாசன், ‘இது சவாலான கேரக்டர். மனதளவில் சில விஷயங்களில் நம் நாடு முன்னேற வேண்டும். அதற்கான விழிப்புணர்வாக இந்த படம் இருக்கும் என்பதால் நடிக்க சம்மதித்தேன்’ என்று கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*