ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா! ஓட்டம் பிடித்த அமைச்சர்கள்:கமெராவில் சிக்கிய காட்சி

பிறப்பு : - இறப்பு :

தமிழகத்தின் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த அமைச்சர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதனால் அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அங்கு சென்று பிரச்சாரம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தண்டையார்பேட்டை பகுதியில் அமைச்சர் உதயகுமாரும், உடுமலை ராதாகிருஷ்ணனும் கட்சியினருடன் சென்றுள்னர். அங்கு ஓட்டுக்கு அவர்கள் 4 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பதாகவும், அவர்கள் இதுவரை யார் யாருக்கு பணம் கொடுத்துள்ளனர், யாருக்கு எல்லாம் கொடுக்க வேண்டும் என்று எழுதிவைத்துள்ளதாகவும் அங்கிருந்த சிலருக்கு தகவல் சென்றுள்ளது.

இதனால் அவர்கள் உதயகுமார் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல் தன் கட்சியினர் உதவியுடன், அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit