சிறைச்சாலையில் பாதாள உலக குழுக்களால் பாரிய மோதல் ஏற்படும் அபாயம்!

பிறப்பு : - இறப்பு :

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட கூடிய அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதுவரையில் மகசின் சிறைச்சாலையில் 10 குழுவை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பாதாள உலக குழுவினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகவும், அவர்களின் அவசியத்திற்காகவும், சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்து வரப்படுவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் பாதாள குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கக்கூடிய சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 1000 என்ற போதிலும், தற்போது 1400 பேரை கடந்துள்ளது.

பாதாள உலக குழு தலைவர்களாக கருதப்படும் கெனட், ஆமி சங்க, சூட்டி உக்கு மற்றும் கழு துஷார ஆகியோர் அவர்களுக்குள் உள்ளடங்குகின்றனர். கொலை செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவர்கள் சமயங் என்பவரின் ஆதரவாளர்கள் சிலரும் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உரிய எண்ணிக்கையை விட அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் இவ்வாறு மோதல் ஏற்பட கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit