சாந்தன் – ஈழத்தின் கலைச் சிகரம் விபரணத் தொகுப்பு (Video)

பிறப்பு : - இறப்பு :

தமிழீழ தேசத்தின் தலைசிறந்த பாடகரான எஸ்.ஜி. சாந்தன் எமை விட்டுப் பிரிந்து ஒரு மாதமாகிறது. இருந்தும் அவர் பற்றிய நினைவுகள் எம் மனதில் இன்றும் பசுமையாக நிழலாடுகின்றன. காலத்தால் அழிக்க முடியாத ஒப்பற்ற கலைஞனான சாந்தன் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் ஒரு தடவை நினைவூட்டி தமிழ் கூறும் நல்லுலகில் அவர் பற்றிய மற்றுமொரு பதிவை விட்டுச் செல்ல கதிரவன் குழுமம் விரும்பியதன் வெளிப்பாடே இக்காணொளி.

ஈழ விடுதலைப் போரில் சாதனை படைத்தோரின் பட்டியல் மிக மிக நீளமானது. அவரவர் தமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு அவர்கள் தமது முத்திரையைப் பதித்துள்ளனர். அந்த வரிசையில் தன் குரல் வளத்தால் விடுதலைப் பயிருக்கு உரமூட்டிய சாந்தன் அவர்கள் தொடர்பான காணொளியை அவரின் 31 ஆவது நினைவு நாளில் வெளியிடுவதில் நாம் பெருமை கொள்கின்றோம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit