சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுகப்போட்டி : 55 ஓட்டங்களால் லம்கோ கழகம் வெற்றி ( புகைப்படங்கள் இணைப்பு )

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

cricket-3

சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக கடினபந்து கிரிக்கெட் சினேகபூர்வ போட்டி மிகவும் கோலாகலமான முறையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் 2017.03.24 ம் திகதி மாலை நேரப்போட்டியாக சாய்ந்தமருது பொது மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்தினரை எதிர்த்து சாய்ந்தமருது கிங்கோசஸ் விளையாட்டுக்கழகத்தினர் மோதியிருந்தனர்.

அந்தவகையில் ஆரம்பத்தில் துடுப்படுத்தாடிய லம்கோ விளையாட்டுக்கழகத்தினர் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து மொத்தமாக 165 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் லம்கோ விளையாட்டுக்கழகத்தினர் சார்பில் அதிகூடிய ஓட்டங்களாக அனித்தலைவர் பயாஸ் 67 (41) ஓட்டங்களையும் மற்றும் சாக்கீர் ஹுசைன் 23 (25) பெற்றார்கள்.

பந்து வீச்சில் கிங்கோசஸ் சார்பில் அஜித் 2 விக்கெட்டினையும் இர்பான் 2 2 விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள்.

cricket-1

cricket-3

cricket-2

166 ஓட்டங்களைப்பெற வேண்டும் என்ற நிலையில் கழம் நுளைந்த சாய்ந்தமருது கிங்கோசஸ் கழகத்தினர் 18 ஓவர்களில் 111 ஓட்டங்களைப்பெற்றார்கள்.

கிங்கோசஸ் விளையாட்டுக்கழகத்தினர் சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்களாக அனித்தலைவர் இம்றான் 26 (15) பெற்றார்.

பந்து வீச்சில் லம்கோ விளையாட்டுக்கழகத்தினர் சார்பில் பயாஸ் , இமாம் , நிகாஸ் போன்றோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள்.

அந்தவகையில் சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகத்தினர் 55 ஓட்டங்களால் வெற்றிபெற்றார்கள்.

வெற்றிபெற்ற அனித்தலைவருக்கு வெற்றிக் கிண்ணமும் பிரதம அதிதிகளால் வழங்கப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit