
நாட்டில் தற்போது இலங்கை மின்சார சபையால் பலர் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மின்வாசிப்பினை அளவீட்டாளர்கள் சரியான முறையில் மின்வாசிப்பினை அளவிடுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதனை உண்மையாக்கும் வகையில் மின்சார சபை உத்தியோகஸ்தர் ஒருவர் பிழையான முறையில் மின்வாசிப்பினை அளவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
This #CEB officer needs to learn some basic maths. Don't even know how to deduct USING a calc. Gov't workers…smh. #lka @Pami1090 #maths pic.twitter.com/7SbfcOshBc
— Roy (@david85roy) March 25, 2017
கடந்த 17 ஆம் திகதி வீட்டின் உரிமையாளருக்கு கிடைத்த மின்சாரப்பட்டியலில் பாவனை செய்த அளவினை விட குறைந்தளவே அதில் போடப்பட்டுள்ளது.
குறித்த மின்சார பட்டியலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றதுடன், இலங்கை மின்சாரசபையில் இருப்பவர்கள் சாதாரண கழித்தல் கணக்கு கூட தெரியாதவர்களா? என கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் இலங்கையில் மின்சார தட்டுப்பாடு ஏன்? ஏற்படாது என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.