தமன்னா, காஜலுக்கு போட்டியாக கேத்ரின் தெரஸா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை தமன்னா, காஜல் ஆகியோர் தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களாக வலம் வந்தாலும் டோலிவுட் சினிமாவில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டு லட்ச ரூபாயை அள்ளுகிறார்கள்.

இது அவர்களுக்கு தனி சம்பாத்தியம் என்றே சொல்லலாம். இதில் தமன்னா சமீபத்தில் அரசியல் பிரமுகரின் மகன் நடித்த படத்தில் ஆடிவிட்டு ரூ.1 கோடி வாங்கினார்.

இதே போல ஐட்டம் பாடலுக்கு ஆடும் காஜல், ராய் லட்சுமி, ஸ்ருதி போன்றோர் 50 லட்சம் ரூபாய் வரை வாங்குகின்றனர்.

இந்த லிஸ்டில் புதியதாக சேர்ந்துள்ள நடிகை கேத்ரின் தெரஸா பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷின் மகன் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஒன்றுக்கு நடனமாடுகிறார்.

இந்த பாடலுக்கு மட்டும் அவருக்கு சம்பளம் ரூ.65 லட்சம் பேசப்பட்டுள்ளதாம். இது தெலுங்கு திரையுலகத்தை மட்டுமில்லாமல் சினிமா நடிகைகளையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*