உன் பொண்டாட்டிட இன்னொருத்தன் இப்படி பண்ணா சும்மா இருப்பியா?

பிறப்பு : - இறப்பு :

வித்யா பாலன் இப்போது பேகம் ஜான் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது. அதற்கான ப்ரோமோஷன்களில் அவர் ஈடுபட்டு உள்ளார்.

அதற்காக தன் குழுவுடன் கொல்கத்தா ஏர்போர்ட்டுக்கு போனபோது ஒரு ரசிகர் செல்பி எடுக்கிறேன் என்ற பேரில் அவர் தோள் மேல் கைபோட்டுள்ளார். நாங்க ஒண்ணும் பப்ளிக் ப்ராபர்ட்டி இல்லை என்று முகத்தில அடிச்சி அவர்கிட்ட கோபமாக சொல்லி ஒரு வாரம் கூட ஆகலை.

அதற்குள் மேடம் சாமி கும்பிட மும்பை சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று இருக்கிறார். அங்கே கண்ணை மூடி மனம் உருகி பிரார்த்தனையில் இருந்தபோது, அவரின் தோளை யாரோ தட்டி இருக்கிறார்கள்.

கண்ணை திறந்துபார்த்து இருக்கிறார். அப்போது ஒருத்தர் நின்று, என் மனைவிக்கிட்ட ஒரு ஹலோ சொல்லுங்க என்று சொல்ல, கடுப்பான வித்யா, மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு இருக்கிறார்.

மீண்டும் தோளை தொட்டு, ஹலோ சொல்லிட்டு சாமியை கும்பிடுங்க என்று சொல்லவும், கோபம் வந்து அப்படியே திரும்பி இருக்கார்.

“உங்க பொண்டாட்டியை அப்படி யாரோ ஒருத்தர் தொட்டா சும்மா இருப்பீங்களா?” என்று கேட்டு உள்ளார் வித்யா.

மேடம், வரவங்க எல்லோரும் தோளை தொடுறாங்கன்னா…கன்பியூஸா இருக்கே!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit