
இணையத்தளங்களில் பதிவு செய்யும்போது பெயர் முகவரி போன்றவற்றை வழங்கி இது ஒரு ரோபோவால் என்டர் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த எழுத்துக்கள் சிலவற்றை உள்ளீடு செய்யவேண்டியிருந்தது.
Captcha எனப்படும் இந்த தொழில்நுட்பம் பலருக்கும் தொந்தரவாக இருந்து வந்தது ஏனெனில் தெளிவற்ற சேர்ந்திருக்கும் எழுத்துக்களை சரியாக உள்ளிட்டால் மட்டுமே மேற்கொண்டு இணையத்தளத்தை பயன்படுத்த முடிந்தது.
இணையத்தை பயன்படுத்தும் நீங்கள் ஒரு ரோபோ அல்ல மனிதரே என்பதை உறுதி செய்ய கூகிள் புதியதொரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் Captcha தொழில்நுட்பத்திற்கு Re Captcha பதிலாக தெரிவுப் பெட்டிகளை உருவாக்கி தந்துள்ளது. (Tick – Boxes)
ஸ்பாமிங்க் ரோபோக்கள் தெரிவு செய்யத் தவறின் அவை மேற்கொண்டு இணையத்தளத்தில் செயற்பட முடியாது.