பரிசோதனை ஓட்டத்துக்காக விண்ணுக்குச் செலுத்தப் பட்டது நாசாவின் ஓரியன் விண் கலம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலுள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து நாசாவின் விண் கலமான ஒரியன் (Orion) பரிசோதனை ஓட்டத்துக்காக ஆட்களின்றி விண்ணில் சீறிப் பாய்ந்துள்ளது.

MPCW எனப் படும் பல்நோக்கு விண் கலமான ஒரியன் குறைந்தது 4 விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்யும் வசதி உடையது.

மேலும் LEO எனப்படும் பூமியின் தாழ் சுற்றுவட்டப் பாதையில் இருந்து கொண்டு சந்திரன், குறும் கோள்கள் மற்றும் செவ்வாய்க் கிரகம் போன்றவற்றிட்கான மனிதர்களின் ஆய்வுக்கு உதவி செய்யக் கூடியதும் ஆகும். டெல்டா IV ஹெவி என்ற ராக்கெட்டு மூலம் ஒரியன் ஓடம் இன்று விண்ணுக்குச் செலுத்தப் பட்டதுடன் குறித்த ராக்கெட்டு சுமார் 14 000 mph வேகத்தில் 8 நிமிடப் பயணத்துக்குப் பின் பூமியின் பூர்வாங்க சுற்றுப் பாதையில் ஒரியனைச் செலுத்தியுள்ளது. மேலும் பூமியில் இருந்து 3600 மைல் உயரத்துக்கு அதாவது சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 15 மடங்கு அதிக உயரத்துக்கு 2 ஆவது ஆர்பிட்டுக்கும் டெல்டா IV ராக்கெட்டு இதை உந்தித் தள்ளும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

2 ஆவது ஆர்பிட்டை அடைந்தவுடன் ராக்கெட்டில் இருந்து பிரியும் ஒரியன் விண்கலம் பூமியில் இருந்து ஏவப்பட்டு 41/2 மணித்தியாலத்துக்குப் பின்னர் பசுபிக் சமுத்திரத்தின் பஜா கலிபோர்னியா கடற்கரையில் இருந்து 600 மைல் தொலைவில் கடலில் வந்து விழவுள்ளது. பின்னர் இதனை இரு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மூலம் நாசா மீட்டெடுக்கவுள்ளது. ஒரியனின் இந்தப் பரிசோதனை ஓட்டம் நேற்றே திட்டமிடப் பட்டிருந்த போதும் சில தொழிநுட்பக் கோளாறுகளால் பின் தள்ளிப் போடப் பட்டது. இதேவேளை 2021 ஆம் ஆண்டு ஓரியன் ஓடம் தனது முதலாவது விண்வெளி வீரர் குழுவை விண்ணுக்குக் காவிச் செல்லத் திட்டமிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*